Pages

Sunday, 23 December 2012

manasu

இனிப்புகளை கண்ட எறும்புகளை போல 
நகரத்தை நினைத்து மொய்க்கிறது மனசு 

கோழி பண்ணைகள்

என்ன சார் உங்க பண்ணைல இருக்கிற 2000 ஆயிரம் கோழி முட்டைய இப்படி வீணா அழிக்கறேங்க ,ஏன்?

என்ன சார் பண்றது , ஊர்ல எல்லாவனும் மாலை போட்டுருக்கான் , அதனால முட்டை விலை குறைஞ்சிடுச்சி . அதான் ...

இப்படி அழிச்சாலும் இழப்பு தான சார் ?

இல்ல பா , இப்ப கடைல ஸ்டாக்கும் குறையும் , அப்ப விலை ஏறிடும் ..

ஒ ஹோ , ஒரு கோழி எத்தனை முட்டை போடும் சார் ?

தினமும் ஒன்னு தான் .. :(

என்னது தினமும் ஒன்னா ? !! அது எப்படி சார் ??

தாய் கோழில இருந்து வரும் முட்டைல நல்லது மட்டும் எடுத்து , அந்த முட்டைய சிறப்பு அறைல பராமிப்பு செஞ்சி , குஞ்சிகளுக்கு வாரம் 2 வக்சின் (vaccine )  12 வாரம் போடணும் ..

அப்புறம் அது ஒரு வருஷதுக்கு தினமும் முட்டை போடும் ..

அது என்ன சார் தாய் கோழி ??

அதுவா! அது தான் உண்மையான கோழி .. 

இவ்வளோ குஞ்சிக்கு போடணும்னா எவ்வளோ சிலவு ஆகும் !

எல்லா சிலவும் சேர்த்தா ஒரு கோடி ஆகும் ..

அப்ப என்ன தான் சார் இதுல இலாபம் வரும் !!

அது என்ன சார் மிஞ்சிபோனா ஒரு கோடி வரும் ..

அடைங்கப்பா !!!

இப்படி ஊசி போட்டு வளர்ற கோழி முட்டை உடலுக்கு பாதிப்பு இல்லையா ??

தெரியல ஆனா நாங்க அதை சாப்பிட மாட்டோம் ...

ஓ ஹோ !!!  

Saturday, 15 December 2012

முகாரி பாடிகொண்டே அந்த ஜெ.சி.பி.
முருங்கையையும் வேம்பையும் எழுமிச்சையையும் வாதன மரத்தையும் சாய்க்க 
ஒற்றை தென்னையும் தேக்கும் புழுதியில் கண்மூடி மௌனம் காக்க 
அதன் நடுவே மூன்றாம் மரமாய் நானும் 

 

மொய்த்தன ..

அந்த முருங்கை மரத்தை தட்டி சாய்க்கும்போது சூழ்ந்துக்கொண்டது ஊர் சனம் ..
ஓரிரு பெண்கள் தங்களின் தேகத்தை தீண்டியவனை போல என்னை பார்த்தனர் ..
உங்கள் எல்லைக்கு வெளியே தானே சார் இது இருக்கு இதை ஏன் சாய்த்தீர்கள் என்ற அவர்களின் 
கேள்வி நியாயமானது தான் என்று எண்ணும் முன்னே அவர்களின் கைகள் அதன் கீரைக்கு மொய்த்தன ..

அதற்கு முன் சாய்த்த பல ஆண்டு வாதன மரத்திற்கு ஏன் இந்த கோவம் வரவில்லை என்பதை அவர்களின் மௌனம் பதில் சொன்னது ..

அந்த பொதுட மரங்களில் கூட வேறுபாட்டை விறகிர்க்கும் வாய்க்குமான மரங்கள் காட்டிவிட்டன ..

வட்டமிடும் கழுகுகள்  அப்பொழுது வானத்தில்மட்டுமல்லாது மண் மேலும் ..

மரத்தை அகற்றவேண்டிய பணம் மிச்சமானதற்காய் ஒருவரும் 
ஒரு வருட விறகை ஒரே நாளில் பெற்றதற்காய் ஒருவரும் 
சந்தோஷப்பட 

விளையாட இடம் போனதை நினைத்து சிறுவர்களும் 
இளைப்பாற மரம் போனதை நினைத்து நானும் 
சோகத்தில் 

அவன் கண்கள்



 பட்டாம்புச்சியை ஏன் இப்படி பிடித்து அடைத்து வைத்திருக்கிறாய் 
என்று அந்த சிறுவனை நான் கடிந்துகொள்ளும்போது 
வாடிவிட்டது 
அந்த வண்ணத்துபூச்சியை போலவே அழகாய் இருந்த அவன் கண்கள் 

Friday, 30 November 2012

அரசுக்கு ஓர் விண்ணப்பம்

சட்டமன்ற வைர விழாவிற்கு அதன் முதல் உறுபினர்களை அரசு அழைக்கிறதாம் ..
எந்த அரசு கட்டிட பொன்விழவிற்க்காவது அதன் கொத்தனாரையும் சிற்றாளையும் 
முடிந்தால் கட்டிட மேற்பார்வையாளரையும் அழையுங்களேன் 


#கட்டிட மேற்பார்வையாளர்  

நல்ல தம்பி

ஒரு கட்டிட தொழிலாளி மேல் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ,
தம்பி என்ற உறவில் ஒருவர் வந்தார் ... 
எதற்கு வந்தார் என்பதை தவறாக புரிந்துக்கொள்ளவேண்டாம்  
தொடர்ந்து படியுங்கள் 
இரண்டு கட்டிட மேற்பார்வையார்கள் இரண்டு மருத்துவமனை சென்று போராடி பின் மருத்துவர்கள் கைவிட 
கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ..
மாலை நேரம் வாக்கில் வந்த அந்த உறவினர் ( பாசமான தம்பி )
வந்ததில் இருந்து உங்கள் கம்பெனி தலைவர்  எங்கே ? அவர் ஆபீஸ் எங்கே ? அவர் ஏன் அழைப்பை எடுக்கமாட்டேன்கறார் என்றவாறு இருந்தார் ..
பின் இரவு சாப்பிட சென்றுவிட்டார் ..
நாங்கள் அண்ணே கொஞ்சம் வாங்க ஐயா சீரியஸ் னு (அவர் இறந்து விட்டார் ) அலைபேசியில் அழைத்தால் 
இரு தம்பி இன்னும் பரோட்டா வரல.. வந்துரேன் னு பதில் சொல்றார் ..
பின் வந்து (பரோட்டா சாப்பிட்டு தான் வந்தார் ) மரணத்தை பற்றி சிறிதும் அலட்டிகொள்ளாது மீண்டும் அதன் தலைவருக்கு அழைக்க இப்ப சுவிட்ச் ஆப் தான் (நாங்க இன்போர்ம் பண்ணிட்டோம்ல )
அவருக்கு கோவம் வந்துவிட்டது ,என்ன ஆளுயா உங்க தலைவர் இப்படி பண்றாரு இந்த உடலை உங்க சைட் ல கொண்டுபோய் வைத்துவிடுவேன் என்று அவர் முடிவெடுக்க, சிறிது நேரம் கழித்து அவரே அழைத்து பேசினார் (நாங்க அதையும் வேறு ஒரு வழியில் இன்போர்ம் பண்ணிட்டோம்ல )
இப்போது அந்த தம்பிக்கு கோபம் வரவேயில்லை .. 
மிக அழகாக பேசினார் , ஐயா அண்ணா இறந்துட்டார் கொஞ்சம் ஏதாவது பாத்து பண்ணா நல்ல இருக்கும் .. 
நீண்ட நேர உரையாடலின் பிறகு  ஒரு புன்னகையுடன் அலைபேசியை வைப்பது மட்டும் தெரிந்தது ( இதை லாம் கேக்கணுமா சாமினு நான் தள்ளிபோயிட்டேன் )..
 செட்டில்மென்ட் முடிவு செய்யப்பட்ட மகிழ்ச்சி  

எந்த நாடக கண்ணீரும் அவருக்கு  வராதது எனக்கு மகிழ்ச்சி 

பொணத்த வச்சும் வியாபாரமா ..!! 

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடல் என் மூளையின் செவிப்பறையில் ஓட 
நான் அந்த இடத்தை விட்டு ஓடி வந்துவிட்டேன் 

பிழைப்பு

ஒரு கம்பனியின் கட்டிட தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து இறந்துவிட்டார் .........
அந்த சைட் மேற்பார்வையாளர் எனக்கு அறிமுகம் ஆனவர் ..
இறந்த செய்தி கேட்டவுடன் அந்த நிர்வாக தலைவர் அலைபேசியை அனைத்து வைத்து விட்டார் 
மேலும் அவர் அந்த சைட் எடுத்து செய்ய வில்லை என்றும் அதன் சைட் மேற்பார்வையாளர் தான் அதை நடத்துவதாகவும் முதல் குற்ற அறிக்கையில் சொல்ல சொல்லிவிட்டார் ..
ஆனால் இறந்த பின் அறிக்கையில் அவரின் உறவினர்கள் சரியாக கம்பெனி பெயரை சொல்லிவிட மாட்டிகொண்டது .. இது போதாது என்று அவர் அழைத்து வந்த வக்கீலுக்கும் இதை சொல்லாது பொன்னது மட்டுமல்லாது சரியாக பணமும் தரவில்லை.. அந்த கோபத்தில் இருந்த வக்கீல் இதை அறிந்தவுடன் அந்த சைட் மேற்பார்வையாளர் நண்பரை அடித்து காவல் நிலையத்தில் தகராறு செய்து,வேண்டும் என்ற அளவு பணம் பெற்றுக்கொண்டு ஒரு வழியாக இரண்டு தினத்திற்கு பின் உடலை பேத பரிசோதைனை செய்து அனுப்பிவைத்தனர் ..

அந்த சைட் மேற்பார்வையாளர் நண்பருக்கு கிடைத்தது எல்லாம் பிரச்சனை தூக்கமின்மை பசி பட்டினி அழைச்சல் சோர்வு மனஇறுக்கம் அடி 

#எவன் வாழ்வதற்கோ எவன் கம்பெனி பெயரோ கெடாமல் இருக்கவோ எங்கள என் டா படுத்துறிங்க 

( பின்குறிப்பு : எங்க கம்பெனி இல்லைங்கோ )

Tuesday, 11 September 2012

மனசாட்சி

நான் உறங்கும்போது 
மனசாட்சி விளித்துகொள்கிறது
அது காலத்தின் உண்மைகளை
எந்த ஆணவமுமில்லாமல்
அவசர அவசரமாய் சொல்லிவிட்டு 
காலை விடியும்போது
தானாகவே அந்த பூட்டப்படாத
சிறைசாலையில் சென்று
அமைதியாய்
நாளைய இரவுக்கான
குறிப்புகளை எழுதுகிறது ..

Friday, 7 September 2012

நிச்சயதார்த்தம்

நிச்சயம் உன் பிராத்தனைதான் 
இன்று நிச்சயமானது
நம் நிச்சயதார்த்தம் 

Thursday, 6 September 2012

நான் தான்

என் வாழ்வின் மிக சுவாரஸ்யமான சண்டைகளில் ஒன்று
உடலுக்கும் மனதிற்குமானது 
யார் யாரை அழிக்கிறார்கள் என்று
எது வென்றபோதிலும் 
இதில் நஷ்டமடைவது நான் தான் ..

மற்றொரு மறைமுக

பெண்களை மட்டும் பள்ளி கல்லூரி விழாவின்போதும்,
நிறுவனங்கள் தங்களின் முகப்பில் வரவேற்பிற்கும் பெண்களை 
நிறுத்துவதென்பது 
நவீன ஆணாதிக்கத்தின் வெளிபாடு 
பெண்களை மீண்டும் கவர்ச்சி பொருளாக மற்றொரு மறைமுக வடிவத்தில் செயல்படுத்துவது ..
காலமும் இடமும் மாறினாலும் அதன் சாரம் மட்டும் இன்னும் மறைந்துருக்கிறது ..
இப்பொது இதை பெண்கள் தான் உடைத்து எறியவேண்டும்

ஆக்கிரமிப்பு

மருத்துவமனையில் பிறந்து 
வீடுகளில் வளர்ந்து 
பள்ளி கல்லூரிகளில் பாடம் பயின்று 
அலுவலகத்தில் வேலை செய்யும் 
ஒருவன்
தன் ஆரோக்கியத்திற்காக மாலையில் 
சாலையில் 
நடைபோட சென்றுவிட்டு 
சினங்க்கொள்கிறான் 
சாலையிலேயே பிறந்து வளர்ந்து பயின்று 
அங்கேயே தொழில் செய்யும் ஒருவனிடம் 
இது ஆக்கிரமிப்பு என்று !!

Tuesday, 28 August 2012

சும்மா

சும்மா இருத்தலே சுகமென்று அறிகிறேன்..
மனம் மட்டும் சும்மா இருக்க முடியாமல் துடிக்கிறது .

மெய்யோ !

மெய்யும் மெய்யும் கூடி
மெய்வுண்டாம் - ஆங்கே
உயிர் நின்றாடி பின்
உயிர்மெய் உண்டாம்
குணமுண்டாம் மனமுண்டாம்
நினைவுண்டாம் செயல்வுண்டாம்
மற்றொரு திருநாளில் உயிர்
நீங்கின் பொருளனைத்தும்
ஆவியாகும் -நின் உயிரும்
உன்னை மறக்கும்
மெய்யே மண்ணாகும்
இதுவே உம் மெய்யோ !
பேதையே !

போலி பிம்பம்

இந்த உலகம் தன்னை போலவே பிறரையும் 
எல்லா விஷயங்களிலும் காண்கிறது.
உண்மையில் அது தன்னையே பார்க்கிறது.. 

Sunday, 26 August 2012

நன்றி

புதிய கார்யை சேறாக்கியதற்காய்
மழையை சபித்துகொண்டிருந்த 
அதே சாலையோரத்தில் 
தன் வீட்டை சுத்தமாக 
கழுவி சென்றதற்காய் 
நன்றி சொல்லிகொண்டிருந்தான்
அந்த சாலையோர சிறுவன் 

எல்லாவற்றின்மீதும்

அந்த சாலையில் இருந்த 
எல்லாவற்றின்மீதும் 
தன் கையெழுத்தை போட்டுவிட்டு சென்றிருக்கின்றன
மழை துளிகள் ....

சாத்தியம்

உனக்கும் எனக்கும் உரியதெல்லாம் 
எல்லோரிடமும் பகிர்ந்துகொள்கிறேன் 
யாரும் விரும்பி கேட்டால் 
உன்னையும்கூட பகிர்வது சாத்தியம்
நட்பில் மட்டுமே 

மறுக்கின்றன

நீ உள்ளே வந்துவிடுவாயோ என்றஞ்சி 
ஓடிவந்து மூடும்போது 
கோபத்துடன் 
மறுக்கின்றன 
மழை காலத்து 
மரசன்னல்கள் 

Saturday, 25 August 2012

நல்மழையே

உன்னைகண்டு ஒதுங்கி செல்பவர்க்கெல்லாம்
நீயும் ஒழிந்துகொண்டால் என்னவாகுமென்று 
பலமுறை காட்டிவிட்டாய் 
இருந்தும் யாரும் உணரவேயில்லை 
நல்மழையே ..

நீ மட்டும் தான்

என்ன ஆச்சரியம் 
எந்த நிறமும் இல்லாமல்
இவ்வுலகில் பிறப்பது 
நீ மட்டும் தான் 
மழை துளியே !

பேஸ்புக்கில்


நான் மழையை  பற்றி கவிதை   எழுதிகொண்டிருக்கும்போது
என் தோழி கேட்டாள் என்ன செய்கிறாய் என்று 
நான் சொன்னேன்
 பேஸ்புக்கில் கவிதை மழை 

பெருநகரில்

நீ நேற்று இரவு வரும்போது
உன்னை நான் பார்க்கவரவில்லை..
நீ வந்ததை அறிந்து  காலை
நான் தேடியபோது
கொபித்துகொண்டா உன் வருகை பதிவை 
மறைத்து போனாய் 
தார் சாலைகொண்ட 
பெருநகரில் 

சன்னல் கதவுகளை

என்னை பார்க்க வருபவர்களெல்லாம் வாசல் கதவுகளை தான் தட்டுவார்கள்
நீ மட்டும் சன்னல் கதவுகளை தட்டுகிறாய் 
பேய்மழையே!!

வாசலில்

நான் சிறுவயதில் பார்த்து ரசித்த 
ஒரே ஓவியம் 
மழைகாலங்களில் 
மண்புழுக்கள் 
என் வீட்டு வாசலில் வரைந்ததுதான் ..

அந்த சிறுமி

தன் கோடீஸ்வர  பெற்றோக்கு தெரியாதவாறு 
மறைந்து மறைந்து தன்வீட்டின் வாசலிலேயே 
கைஏந்தி  நிற்கிறாள்
உன்பெரும் கொடையில்
சிறிதளவாது என் கைகளில் தந்துவிடுவென்று 
மேகத் தேவதையிடம் 
அந்த சிறுமி 
ஒரு மழைநாளில் 

Friday, 24 August 2012

அதுவரை

எல்லோருக்கும் எல்லாமும் ஒருநாள் அறிய வரும் - எல்லோரும் 
எல்லாமும் செய்துகொண்டேதான் இருப்பார்கள் அதுவரை ..

தண்டனை

தெரியாமல் செய்த தவறுகள்ளுக்கும்
தண்டனை கொடுப்பதென்றால் ...
என்ன செய்வது 
தெரிந்தே தண்டித்த உன்னை ?

Wednesday, 22 August 2012

தெரியுமே

யாருக்கும் தெரியாது என்பதற்காய்
சந்தோஷபட முடியவில்லை 
எனக்கு தெரியுமே -என் 
தவறுகள்

கடக்கும் வரை

எல்லாரும் எல்லாமும் அவரை நோக்கி.
காலங்கள் கடக்கும் வரை வெவ்வேறு காலத்தில் 

Monday, 20 August 2012

மறுபடியும்


மிக புரிதலோடு செய்யப்பட்ட நேற்று
புதிராய் மாறியது இன்று

ஏதுமறியாது சிறுவனாய் இருந்தபோதும் 
ஏதேதோ அறிந்த இளைஞனாய் வாழ்ந்தபோதும் 
விரும்பி செய்த தவறுகள் எத்தனை..!!
ஒன்றை விட்டோழிக்க மற்றொன்றை 
பற்றினேன்

குடியை தொலைக்க தனிமையை பற்றினேன் 
தனிமையை மறந்து உன்னை பற்றினேன்
என்னை  மறந்து புகையை பற்றினேன்
உன்னையும் என்னையும் புரியாது 
மற்றொரு குடியை மறுபடியும் ..

என் முன்னே பல சுவர்கள் 
அனைத்தையும் இடித்தேன்- பின்
என்னாலே பல மதில்கள் என்னை சுற்றி 


எல்லாம் அனுபவம்

நேற்று என்ற பக்கங்கள் என்றுமே அழகானதாய் இருக்கிறது 
இன்று பார்க்கும்போது ..
எத்தனை மனிதர்கள் எத்தனை அனுபவங்கள் ..
வந்தவர்களின் வருகை பதிவு என்னிடமுண்டு 
சென்றவர்களின் செலவுக்கணக்கு புரிதலுக்கு அப்பால்..
எதுவுமே நிலைப்பது இல்லை..
இன்றும் ஒருவேளை அழகாய் தோன்றுமோ நாளை?
ஆனால் நிகழ்காலத்தில் வாழாதவன் ஒரு நாளும் வாழமாட்டான் மகிழ்ச்சியாக.. 

எல்லாம் அனுபவம்..........

பக்தி யோகம் ஞான யோகம் 
                                                    கர்ம யோகம் இராஜ யோகம் 
                                                    எல்லாம் முயற்சித்து பார்த்தேன் 
                                                    வாய்க்கவில்லை 
                                                    மரணயோகம் 
                                                    இன்னும் 
                                                    மனதிற்கு .....

Friday, 17 August 2012

இவர்களுக்கு மட்டும்

சாலையில் கடைவிரிபோருக்கும்  
கதவுகளே இல்லாத அந்த
சாலையோர கடைகளுக்கும் 
அன்று ஒருதினம் முன்னதாகவே 
 பூட்டு

ஒருவேளை இவர்களுக்கு மட்டும் 
சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 ஆ 

Thursday, 16 August 2012

கல்லூரிக் காதல்


நான் மறுபடியும் உன்
னை  புதிதாய் தேடி சந்திக்கவேண்டுமே
என்பதற்காக பிரிய மறுக்கிறேன் ....

நீ என்னை பிரிய வேண்டியே
 சந்திக்க மறுக்கிறாய்..

கையில்


கானல்நீரில் கண்ட மீனை
கையில் பிடிக்க
கண்ணீரில் நிறைகிறேன்

மறத்தல்




தன் வீடுகளுக்கு சென்ற பின் எல்லோரும்
மறந்துபோய் விடுகிறார்கள் தன்னை
துணை கொண்ட சாலையை - அவளை போல

கருமை

 ஓவியம் வரைந்து பழகவேண்டும்
 என்ற நீண்ட நாள்  ஆசையில்
 துரிகை எடுத்தேன் 
எனக்கு வசப்பட்டது 
என் நிழலின் அச்சி மட்டுமே ....

அலை




இங்கே ஒருவரும் மகிழ்ச்சியாய் இல்லை
அங்கே யாரும் உள்ளனரோ?
இறந்த உலகத்திலிருந்து வாழும் மனிதர்கள்
புதைந்த உலகத்தில் இறந்த மனிதர்களிடம் ...

வாழ்க்கை




நான் படிப்பதில் சிறந்த இலக்கியம் வாழ்க்கை தான்.. ஆனால் ஏனோ
அதன் இலக்கணம் மட்டும் தவறுகளை சார்ந்தே எழுதப்பட்டது .....

ஆசையில்லாமல் வாழ ஆசை


Photo


புத்தன்
வருவனோ வழித்தேடி
வெகுதொலைவிற்கு அப்பால் நான்..

என் தலைவா


வருவாயோ என் தலைவா
வருவாயோ நீ தமிழா

உன் பெயரை சொன்னாலே
கண்களிலே அனல் பறக்கும்
இதயத்திலே அணு பிளக்கும்
பூங்காவிலும் போர் வெடிக்கும்

உன் பெயரை சொல்வதற்கே
அரசாங்கம் தடை விதிக்கும்

உன் பெயரும் தமிழ்தானே
வீரம் உந்தன் முகவரியே

முகவரிகள் உனக்கில்லை
முகமொழி மட்டும் உனக்குண்டு

வரிகள் கொண்ட வாழ வரிபுலி நீ அல்ல
விடுதலையை உன் மொழியை கொண்டு வாழும்
விடுதலை புலி நீ ஆவாய்

என் முன்னே நீ வந்தால்
உன் பின்னே நான் வருவேன்

என் தலைவா நீ வருவாய்
வாருவாயோ நீ தமிழா???

இலையுதிர்க் காலம்


காதலின் அந்திமக்காலத்தில் ஒருநாள்
சமுகவலைதளத்தில் உன் முகம்

இலையுதிர் பருவத்து மரம் போல
வார்த்தைகளை தொலைக்க தவித்தது மனம்

வலைப்பூவில் நீ இருந்தும்
வார்த்தைகளை அவிழ்க்கவில்லை

காதலை தொலைத்தவளாய் நீ
வார்த்தைகளை இழந்தவனாய் நான்

நான் இருப்பதை கண்டும் காணமால் போனாய் நீ
உன்னை கண்டு காணாமல் போனேன் நான்

நான் உன்னை பிரிந்ததைவிட கொடிது
நீ என்னை மறந்தது

நீ தந்த காதல் என்னிடமுண்டு - ஏனோ
நான் மட்டும் உன்னுடன் இல்லை

உன் மௌனயுத்ததிலே மரிப்பது
காதல் அல்ல - ஆனால் காதலன்!

மண்ணில் தோன்றி மரிக்கும் பொருளல்ல
விண்ணில் தோன்றி மறையும் மின்னலும் அதுவல்ல
இதயத்தில் பிறந்து உயிரில் வாழ்வது என்னுடையது

ஆழியில் உயிர்ப்பெற்று கார்முகிலில் உடல்வளர்த்து
மலைகளில் நீர்வுற்றும் மழைப்போல
இதயத்திலே வேர்விற்று கண்களிலே உருப்பெற்று
உயிர்வலியால் வழியுது கண்ணீர்

இலையுதிர்க்காலத்து மரம் போல
உயிர் உதிர்க்காலம்வரை சுமப்பேன் நம் காதலை

மீண்டும் ஒருமுறை உன்னோடு


கதிரவன் தன் ஒளிக்கரங்களால் மலைகளையும் பள்ளதாகையும் ஒன்றாய் முத்தமிட்ட நேரம்
மணல்வெளியும் தார்சாலையும் சமமாய் சுட்டெறிந்த நண்பகல்,
மின்கடத்திகளைவிட சூடாய் இந்த அந்த சாலையோர வண்டிகள்,
தீயில்விழுந்த புழுப்போல நோவில்விழுந்த மனம்போல
வெறுமையாய் நகர்ந்த அந்த மூதாட்டி,
மண்ணின் சுமையெல்லாம் தண்ணீரால் இறக்கமுயன்று தோற்று மயங்கிய
சாலையோர குடிகாரன்,
எப்பொழுதும் சிரிக்கும் தெருவோர கடைகள்,
கடந்து செல்வோரை விர
க்தியோடு பார்க்கும் நாய்,
தன்னை தாண்டி செல்வோர்கள் ஒரு நொடியாது
என்னிடம் நிர்க்கமாடார்களா என நோக்கும் பிச்சைகாரன்,
எதற்குமே சிரிக்க மறந்த அவசர மனிதர்கள்,
என்ன நடந்தாலும் தன் தனிமையிலும்
பிறரின் தலைகோரும் ஒத்தைமரம்
அதன் நிழலில் நான் .. ..
எத்தனை முறை கடந்திருப்பேன் இந்த சாலையை உன்னோடு
இன்னும் ஒருமுறை வருவாயோ என்னோடு..

நம் காதல்


நான் உன்னுள் விழுந்து அணைவதற்கும்
நீ என்னில் தெளித்து ஆவியாவதற்கும்
தீகுச்சிகும் தண்ணீருக்குமான உறவல்ல இது

நான் வரும்போது நீ மறைந்து போகிறாய்
பின் என் ஒளி மட்டும் வாங்கி
செல்கிறாய்
உன் பூமியை அழகாக்க

சூரியனுக்கும் சந்திரனுக்குமான காதல் போல்
உனக்கும் எனக்குமான காதல்

மர்ம புன்னகை காந்திஜி




ஒரு முறை என் நண்பர் ஒருவருடன் அரசாங்க அலுவலகமொன்றுக்கு சென்று இருத்தேன்
எப்பொழுதும் போலவே அன்றும் ரொம்ப கூட்டமாகவே இருந்தது
நீண்ட நேரம் காத்திருந்தும் வேலை நடக்கவில்லை
நான் அலுத்துப்போய் அங்கிருந்த தின்னையோன்றில் சென்று உக்கார்ந்துகொண்டேன் அவன் தன் வேலையை முடித்து வரட்டுமென்று
அங்கு நடப்பதை எல்லாம் பார்த்தவாறு இருந்தேன்
அந்த அலுவலர் வந்ததே தாமதம்
வந்தவுடன் எங்கோ எழுந்து செ
ன்றுவிட்டார்
பின் டீ குடிக்க ஒருமுறை
ஆனால் வேலை ஏதும் நடந்தபாடாய் இல்லை
அவரின் இருக்கைக்கு பின்னால் ஒரு காந்தி படம்
காந்தி சிரித்தவாரே இருந்தார்
அந்த புகைப்படமும் அவரின் புன்னகையும் மௌன சாட்சியை இருந்தது எனக்கு
அவரின் புன்னகையில் லைத்துபோய்விட்டேன்..
சிறிது நேரம் கழித்து வந்த நண்பர் கோபத்துடன் சொன்னார்
வேலை நடக்கல டா நாளைக்கு வரணுமா ..
காந்தி போலவே நானும் சிறிது கொண்டே வா போலாம் என்றேன்

மோனோலிசாவின் புன்னகையை போல எத்தனை மர்மமானது உன் புன்னகை காந்திஜி

எந்த அரசாங்க இடத்திலாவது வேலை உடனே நடக்குமா என்று நினைத்த படி செல்கையில்...

எதிரே ஓர் அரசாங்க மதுக்கடை
ஆனால் வேலை படு வேகமாக நடக்கிறது
இங்கேயும் காந்திக்கு இடம் இதுக்குமா என்று எனக்கு தெரியாது
எனினும் அவர் அங்கு இருந்தால் மர்ம புன்னகையை மறந்து மௌன கண்ணீருடன் தான் இருப்பார் ..

துயர்



போலி


அன்று குழுக்களாக மக்கள் தங்கள் இடத்தை விரிவாக்க கோடரி வில் ஈட்டி கொண்டு சண்டை செய்தார்கள் ..
இன்று நாடுகளின் பெயர் சொல்லி யுத்தம் செய்கின்றனர்.
இதில் இவர்களே சமாதானத்தை பற்றி பேசுகிறார்கள் .. அன்பு செய்ய வேண்டுகிறார்கள் ..

வேடிக்கை ....

உண்மையில் இவர்கள் யாரும் யாரிடமும் உண்மையாக நட்பு கொள்வதேயில்லை ..
தான் உயரத்தில் இருக்கும் போது பிறரை நினைப்பதேயில்லை .
தனக்கு இழப்பு என்றால் தர்மம் சமத்துவம் நீயதி பற்றி பிதற்றுகிறார்கள் ..

தலைவனும்.. மக்களும்.. போலி தான் ..
ஒரு வேறுபாடு மட்டும் தான்..
அவனுக்கு பிறரை எமாற்ற வாய்ப்பு கிடைத்தாயிற்று ..
பாவம் மக்களுக்கு அவன் அளவில் ஏமாற்ற சந்தர்ப்பமில்லை.. இவனும் அவன் அளவில் எளியவரை சாதி மதம் இனம் மொழி வசதி பொருளாதாரம்
பாரம்பரியம் குடும்பம் என ஏமாற்றவே செய்கிறார்கள் ..

#மனிதன் #சுயநலம் #சமத்துவமின்மை #பாகுபாடு

முதலாளித்துவம் மக்களின் விரோதி


இவர்கள் உங்களை முழுமையாக சுரண்டிவிடமாட்டார்கள் .. அவர்களுக்கு தெரியும் எந்த அளவு ஒருவனை துரத்தினால் , நின்று திரும்பி அடிக்கமாட்டன் என்று..
இங்கே எல்லாருக்கும் சம வாய்ப்பு வசதிகள் இருப்பது போலவே நம்பவைப்பார்கள். இல்லையெனில் சாமானியன் (common man i.e middle class people on basis of economics of state and nation) தன்னை காத்துக்கொள்ள முதலாளிவர்க்கத்தை எதிர்த்து வென்றுவிடுவார்கள்.. அவர்களுக்கு ஆதரவாக செயல்ப்படும் அரசாங்கங்கள் தூக்கி எறியப்படும்.

#முதலாளித்துவம் மக்களின் விரோதி .. # அரசாங்கம் அவர்களின் தினக்கூலி...

மெய்க்காதல்


தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் என்ற டார்வின் கொள்கையை நம்புகிறவன் நான் ... காதலிலும்..
#மெய்க்காதல்

Wednesday, 15 August 2012

நீயும் நானும் யோகியனா??



21 ஆம் நூற்றாண்டின் எட்டப்பன்


கேள்வி ஒன்று ??



யார் அறிவாளி???



எது சுதந்திரம்??




என் சிறு வயதில் வீட்டு கம்பத்தில் ஏறி
தேசிய கோடியை ஏற்றி சந்தோஷ பட்டிருக்கிறேன்

வளரும் பருவத்தில் சட்டையில் மூவண்ண தாளை குற்றிக்கொண்டு
தெருவெல்லாம் சுற்றிருக்கிறேன்

தேசிய மாணவர் படையில் இருந்த காலத்தில் தவறாது
தேசிய கோடிக்கு மரியாதையை செய்ய சென்று இருக்கிறேன்

இன்று என்னுளே பல கேள்வி
அதில் ஒன்று

எது சுதந்திரம்??