அந்த முருங்கை மரத்தை தட்டி சாய்க்கும்போது சூழ்ந்துக்கொண்டது ஊர் சனம் ..
ஓரிரு பெண்கள் தங்களின் தேகத்தை தீண்டியவனை போல என்னை பார்த்தனர் ..
உங்கள் எல்லைக்கு வெளியே தானே சார் இது இருக்கு இதை ஏன் சாய்த்தீர்கள் என்ற அவர்களின்
கேள்வி நியாயமானது தான் என்று எண்ணும் முன்னே அவர்களின் கைகள் அதன் கீரைக்கு மொய்த்தன ..
அதற்கு முன் சாய்த்த பல ஆண்டு வாதன மரத்திற்கு ஏன் இந்த கோவம் வரவில்லை என்பதை அவர்களின் மௌனம் பதில் சொன்னது ..
அந்த பொதுட மரங்களில் கூட வேறுபாட்டை விறகிர்க்கும் வாய்க்குமான மரங்கள் காட்டிவிட்டன ..
வட்டமிடும் கழுகுகள் அப்பொழுது வானத்தில்மட்டுமல்லாது மண் மேலும் ..
மரத்தை அகற்றவேண்டிய பணம் மிச்சமானதற்காய் ஒருவரும்
ஒரு வருட விறகை ஒரே நாளில் பெற்றதற்காய் ஒருவரும்
சந்தோஷப்பட
விளையாட இடம் போனதை நினைத்து சிறுவர்களும்
இளைப்பாற மரம் போனதை நினைத்து நானும்
சோகத்தில்
No comments:
Post a Comment