Pages

Thursday, 16 August 2012

இலையுதிர்க் காலம்


காதலின் அந்திமக்காலத்தில் ஒருநாள்
சமுகவலைதளத்தில் உன் முகம்

இலையுதிர் பருவத்து மரம் போல
வார்த்தைகளை தொலைக்க தவித்தது மனம்

வலைப்பூவில் நீ இருந்தும்
வார்த்தைகளை அவிழ்க்கவில்லை

காதலை தொலைத்தவளாய் நீ
வார்த்தைகளை இழந்தவனாய் நான்

நான் இருப்பதை கண்டும் காணமால் போனாய் நீ
உன்னை கண்டு காணாமல் போனேன் நான்

நான் உன்னை பிரிந்ததைவிட கொடிது
நீ என்னை மறந்தது

நீ தந்த காதல் என்னிடமுண்டு - ஏனோ
நான் மட்டும் உன்னுடன் இல்லை

உன் மௌனயுத்ததிலே மரிப்பது
காதல் அல்ல - ஆனால் காதலன்!

மண்ணில் தோன்றி மரிக்கும் பொருளல்ல
விண்ணில் தோன்றி மறையும் மின்னலும் அதுவல்ல
இதயத்தில் பிறந்து உயிரில் வாழ்வது என்னுடையது

ஆழியில் உயிர்ப்பெற்று கார்முகிலில் உடல்வளர்த்து
மலைகளில் நீர்வுற்றும் மழைப்போல
இதயத்திலே வேர்விற்று கண்களிலே உருப்பெற்று
உயிர்வலியால் வழியுது கண்ணீர்

இலையுதிர்க்காலத்து மரம் போல
உயிர் உதிர்க்காலம்வரை சுமப்பேன் நம் காதலை

No comments:

Post a Comment