கதிரவன் தன் ஒளிக்கரங்களால் மலைகளையும் பள்ளதாகையும் ஒன்றாய் முத்தமிட்ட நேரம்
மணல்வெளியும் தார்சாலையும் சமமாய் சுட்டெறிந்த நண்பகல்,
மின்கடத்திகளைவிட சூடாய் இந்த அந்த சாலையோர வண்டிகள்,
தீயில்விழுந்த புழுப்போல நோவில்விழுந்த மனம்போல
வெறுமையாய் நகர்ந்த அந்த மூதாட்டி,
மண்ணின் சுமையெல்லாம் தண்ணீரால் இறக்கமுயன்று தோற்று மயங்கிய
சாலையோர குடிகாரன்,
எப்பொழுதும் சிரிக்கும் தெருவோர கடைகள்,
கடந்து செல்வோரை விர
க்தியோடு பார்க்கும் நாய்,
தன்னை தாண்டி செல்வோர்கள் ஒரு நொடியாது
என்னிடம் நிர்க்கமாடார்களா என நோக்கும் பிச்சைகாரன்,
எதற்குமே சிரிக்க மறந்த அவசர மனிதர்கள்,
என்ன நடந்தாலும் தன் தனிமையிலும்
பிறரின் தலைகோரும் ஒத்தைமரம்
அதன் நிழலில் நான் .. ..
எத்தனை முறை கடந்திருப்பேன் இந்த சாலையை உன்னோடு
இன்னும் ஒருமுறை வருவாயோ என்னோடு..