Pages

Thursday, 21 February 2013

இறந்த பாம்புகள் நகரும் சாலை



ஒரு பட்டாம்பூச்சியின் பறக்கும் நிழல்களில் வண்டி ஏற்றி படபடக்கும் மனதினை ..
அதன் நிழலில் வண்டி எற்றியதற்க்காய் உங்கள் கண்களை கொத்தி செல்வதை பார்க்கும் 
தெருவோர நாய் ஒன்றை ..
பூனையின் புண்களில் வட்டமிடும் ஈக்களை கோவித்துக்கொள்ளும் எலிகளை ..
நீங்கள் கண்டிருக்கீர்களா இறந்த பாம்புகள் நகரும் சாலையை ..
அங்கு இதுவெல்லாம் தினசரி நிகழ்வுகள் 

Tuesday, 19 February 2013

மழைத்துளிகளை உறிஞ்சி

மழைத்துளிகளை உறிஞ்சி 
மைத்துளிகளை சிந்துகிறது 
இதயம் 

தெளித்துச் செல்கிறது

நேற்று என் வண்டியில் 
சிக்கிய பட்டாம்ப்பூச்சிக்காகவோ 
பட்டாம்பூச்சியிடம் சிக்கிய 
என் மனதிற்காக 
மேகம் தன் இரங்கல் கவிதைகளை 
தெளித்துச்  செல்கிறது 

எட்டி பாக்கிறது

மேகம் தன் அம்புகளை 
ஏவியதும் வழித்திறந்து 
விலகுகிறன 
என் வலிமையற்ற 
ஓட்டுவீடு 

இரு கண்ணாடி ஓடுகளினூடே 
என்னை பத்திரமா என்று 
எட்டி பாக்கிறது 
மின்னல் 

மூன்றாமவனின் நெஞ்சில் மட்டும்

மேகம்
 எதற்காகவோ கண்ணீர்
 அஞ்சலி செய்கிறது 
என்றான் முதலானவன் 

இல்லை 
அது தன் ஆனந்த கண்ணீரை 
எனக்காய் பரிசளிக்கிறது 
என்றான் இரண்டாமவன் 

ஒன்றும் சொல்லாமல் நின்ற 
மூன்றாமவனின் நெஞ்சில் மட்டும் 
மழை வெள்ளம் 

மண்புழுக்கள்

மண்புழுக்கள் மனிதர்களைவிட
மேலானவை 
மழையை வரவேற்க 
வெளியேவருகிறது  

கைகளில் மழைத்துளிகள்

பூமிக்கு தெரியாமல் 
சில கவிதைகளை 
திருடிக்கொண்டேன் 

கைகளில் மழைத்துளிகள் 

மழை நின்ற பின்னிரவில்

உள்ளே வராததற்காய் 
புழுங்கி சாகிறது 
கான்கீரிட் சுவர்கள் 

ஏன் அடைத்து வைத்தாய் என்று 
சிணுங்கிக் கொள்கிறது மேற்கூரை 

வேர்வைகளை கொண்டு 
மன்னிப்புக்கோர்கிறான் 
வீட்டுக்காரன் 

மழை நின்ற பின்னிரவில் 

மேகங்கள் மட்டுமே

இங்கே 
கருப்பாய் இருப்பதற்காய் 
ரசிக்கப்பட்டது 
மேகங்கள்  மட்டுமே 

மறைத்துவைக்கிறேன் நனையாமல்

இன்று வந்த 
மழையிடம் இருந்து 
மறைத்துவைக்கிறேன் நனையாமல் 
நாளைய மழைக்கான 
கவிதை ஒன்றை 

பேனாக்களும்

மழை வரும்போது 
பேனாக்களும் 
தன் மூடியை திறந்து வைக்கிறன 

பூட்டும் சாவியும்

பூட்டும் சாவியும் 
சண்டைக்கொள்கிறது 
மின்சாரமற்ற இரவில் 
மழையை விடுத்து மனைக்கு 
ஏன் வந்தாயென்று 

சொல்லித்தந்தது மழை தான்

மனிதன் இறந்தால் 
ஆவி ஆவான் 
மேலே போவான் 
மீண்டும் பிறப்பான் 
சொல்லித்தந்தது மழை தான் 

சாரைப்பாம்பினை போல்

இரண்டு கவிதைகள் 
பேசிக்கொள்கிறன 
எது அழகென்று 

சாரைப்பாம்பினை போல் 
வளைந்து வேகமாய் செல்கிறது 
மழை நீர் 

கட்டி தார்பாய்கள்

ஆலங்கட்டி மழை பொழியும்போது 
சிமெண்டு பைகளை பத்திரப்படுத்த பின் 
ஒடுபவனிடம் 
சத்தமிடுகின்றன 
கட்டி தார்பாய்கள் 

மழையென் றறிந்தால்

நிச்சயம் வருவாள் அவள் 
இங்கு மழையென் றறிந்தால் 
கவிதை 

மழையும் இரவும்

மழையும் இரவும் 
சந்தித்துக்கொள்ளும் போது 
மின்னல்கள் மறைவதில்லை 

காமத்திற்கு பின்

புயலாய் வந்தது காற்று 
மௌனமாய் பொழிகிறது மழை 
காமத்திற்கு பின் வந்த காதல் போல 

காம மழை

குளிர்ந்த நீரால் 
சூடாக்குகிறது உடலை 
காம மழை 

கருமேகம்

கருமேகம் 
கண்ணீரால் தன்னை 
சுத்திகரித்துக்கொள்கிறது 
#மனம் 

தொட்டாசிணுங்கிகள்

மழைத்துளிகள் தொட்டு ஓவியம் 
வரைந்தால் காகிதங்களெல்லாம் 
தொட்டாசிணுங்கிகள்  

தோற்றுப்போனேன்

மழைத்துளியிடம் தோற்றுப்போனேன் 
அழகான கவிதை ஒன்றை 
எழுத முயன்று 

Friday, 15 February 2013

வான் முழுதும்


வான் முழுதும் 
ஒரே நிலவு 
அமாவாசை தினமன்று 

மரணத்திற்கு முன்பு வரை

கண்ணீரில் அர்த்தமில்லை 
கண்களை தொலைத்த 
பின்னே 
மனதிற்கு புரிவதில்லை 
மரணத்திற்கு முன்பு வரை ..

சுட்டெரிக்கிறது சூரியன்

உன் நிலவை 
காட்டிவிடுவென்று 
பூமியை சுட்டெரிக்கிறது 
சூரியன் 

ஆயிரம் சூரியனின் 
பாதுகாப்பில் 
மறைந்திருப்பது 
தெரியாமல் ..

கால் தைத்த

தலைசுற்றி நிக்கிறன 
கால் தைத்த காத்தாடிகள்

நட்ச்சத்திரங்களுக்கு நடுவே

இராப்பறவையாய் வாழ்கிறேன் 
நட்ச்சத்திரங்களுக்கு நடுவே

கானல்

வறண்ட பூமியின் 
கானல் நீர் போல 

உன் காதலை நம்பியே 
முடிகிறது காலம் ..

வாழ்கிறாய் எப்படி


பஞ்சும் நெருப்பும்
பக்கத்தில் இருந்தால்
பற்றிக்கொள்ளுமென்ற விதியை
கடந்து
வாழ்கிறாய்
எப்படி சிகரட் துண்டே ??

விடியும் முன்

நேற்று பின் இரவில்
தூங்க செல்லும்போது
ஓர் விடியல்

அது விடியும் முன்பே
மறைந்தது ..

Wednesday, 13 February 2013

சும்மாவே பேசிக்கொண்டிருப்போம்

வறண்ட வாழ்க்கை என்பது என்ன !!
சரக்கு வாங்க கூட விருப்பமில்லாமல் தனியே கிடக்கும் போது 
மேஸ்த்திரி அழைப்பார் , சார் என்ன பண்றேங்க தனியா ?, வாங்க ..
போனால் குவாட்டர் வாங்கி வைத்துதிருப்பார் , சார் இதாங்க கொஞ்சம் குடிங்க ..
வேணாம் பா குடிக்கறது இல்ல ..
அடே அப்பா சும்மா குடிங்க என்று கூறி நமக்கும் உற்றுவார் ..
சீர்ஸ் சொல்லாமல் அவராகவே குடித்துவிடுவார் உற்றியவுடன் , பின் நம்மை கேப்பார் நீங்க இன்னும் குடிக்காம ஏன் வச்சிருகேங்க ..
நாமும் சமத்துவம் கருதி மட்டமான சரக்காக இருந்தாலும் 
குடித்து விட்டு சைடு டிஸ் க்கு பார்த்தால் கொஞ்சம் வெங்காயமோ கொத்தமல்லியோ அவர் கையில் இருந்து வரும் ..
ஆபத்துக்கு பாவமில்லை என்று கிடைத்த சைடு டிஸ் யை சாபிட்டு சும்மாவே பேசிக்கொண்டிருப்போம்

bachelor life

அந்த முக்கு கடை ஐயா அழைப்பார் , கண்ணு இன்னைக்கு வீட்ல ஒரு விசேஷம் வடை சுட்டேன் இந்தா ஒன்னு சாப்ட்டு பாரு, நல்லா இருக்கா ? இப்ப தான் போறியா கண்ணு !

வழியில் லிப்ட் கேட்டு வண்டியில் வருபவர் கேப்பார் , தங்கத்துக்கு ஊர் எது ?
திருநெல்வேலி ஐயா .. அப்படியா நம்ம புள்ள ரெண்டு பேரு அங்க தான் கட்டி குடுத்திருக்கோம் , இந்த ஏதும் பிரச்சனை னா என் உறவுன்னு சொல்லு என்பார் .

சரி என்று கிளம்பினால் சைட் அருகே இருக்கிற டீ கடை அம்மா கேப்பாள் ,
சாமி சாப்பிட்டயா ?? சாப்பாடு தான் இங்க நல்லா இருக்காது , தினமும் இதையே சாப்ட்ட ஒடம்புக்கு என்ன சத்து இருக்கும் சாமி !!

அவரவர்களை அவர்களின் அன்பை அங்கயே விட்டுவிட்டு வெறுமையோடு செல்வோம் வேலைக்கு 

பரந்திருக்கிறது


பொறுமையாய் பருகுங்கள் 
வாழ்வு முற்றும் 
வரையில் 
பரந்திருக்கிறது 

#காதல் 

மிட்டாய்


உன்னை திண்ண 
எறும்புகள் வந்தது 

உன்னை மீட்க 
ஏறும்புகளுடன் 
சண்டை இட்டேன் 

வென்றது நான் என்றால் 
நாவில்  கசக்குகிறாய் ..

மிட்டாய் 

நீ தந்த கவிதைகள்


என் வாழ்க்கையை திருடிக்கொண்டு 
கவிதைகளை தந்து போனவள் நீ ..

என் வாழ்க்கையாக 
நீ தந்த கவிதைகள் 
இனி ..

சிரிப்பின் போதை

உன் வார்த்தை கேட்டு 
என் செல்போனும் சிலுர்க்கிறது 

உன் உதட்டு சிரிப்பின் 
போதை போல் 
எந்த மதுவும் தந்ததில்லை 
எனக்கு

வண்டுகளுக்கே

வண்டுகளுக்கே ரோஜா 
என்றால் 
பட்டாம்பூச்சிகள்  பிறந்து என்ன ?

மௌனத்தின் அர்த்தம்


எங்கு தேடியும் 
புரிந்துக்கொள்ள முடியவில்லை 

உன் மௌனத்தின் 
உண்மை அர்த்தம் 

ஊமையாகி போனேன் 
நான் 
ஊடல் கண்டு பிரிந்தது 
காதல் 

முத்த கவிதைகள்


உனக்கு
முத்த கவிதைகள்
எழுத சொல்லிக்குடுத்தவன்
நான் தான்

பிழையாக உதடு மாற்றி
நீ எழுதினாலும்
பழி எனக்குதான்

இலக்கணம் தெரியாதவன்

உன் முகம் !!

எல்லா வெண்மைக்குள்ளும் பல 
 கருமை ஒழிந்திருக்கும் என 
நிற ஆய்வு சொன்னது 

இரு கருமைக்குள்ளும் ஒரே 
வெண்மை ஒழிந்திருக்குமே 

என் கண்களில் 
உன் முகம் !!