மதிய வெயிலில் உணவு விடுதி நோக்கி செல்ல முற்படுகையில் எதிரே வந்தார் அப்பாசாமி .. வெத்தலை வாங்கிக்கொண்டு திரும்ப வருகிறார்.. அவர் என் கட்டிடத்தில் தான் வேலைப்பார்க்கிறார் .. ஐம்பதுகளை கடந்த எண்களில் எதோ ஒன்று அவர் வயதாக இருக்கலாம் .. தளர்வான சட்டையும் வெண்ணிற வெட்டியும் எப்போதுமே, இங்கு வேலை செய்வதால் என்னமோ அது முழுதும் வெள்ளை என்று சொல்ல இயலாது .. என்னில் இருந்து இருபது அடி முன் தன் வண்டியை நிறுத்தினார் ... என்னையே பார்த்தார் .. என்ன ஐயா இங்க நின்னுட்டீங்க போய் வேலைய ஆரம்பியுங்க சீக்கிரம் , நான் போயிட்டு வரும்போது கான்கிரிட் போட்டு முடிச்சிருக்கணும் என்று சொன்னேன் .. பொதுவாகவே நான் யாரையும் அதட்டியோ திட்டியோ வேலை வாங்குவதில்லை .. அதே போல சொல்லிவிட்டு சரி வரேன் என்றதும் ஓரிரு கணங்களின் மௌனத்திற்கு பின் அவர் கேட்டார் சார் உங்களுக்கு கொய்யா க்கா வேணுமா ..
கொய்யா க்கா எங்க இருக்கு இந்த இடத்துல .. யார் தந்தா ? என்பதை உங்களுக்கு எது கொய்யா க்கா இங்க என்றேன் ? பொதுவாக எல்லா கேள்விகளையும் பதில்களையும் சுருக்கமாக சொல்லித்தான் பழகிவிட்டேன் வேலைக்கு வந்த தனிமைக்காலங்களில் ..
அங்க பாருங்க சார் என்று கண் காட்டினார் .. மாட்டு தொழுவம் .. சோள தட்டைகளின் வாசம் சாணமுடன் சேர்ந்து .. இங்கு சோள பயிர்கள் தான் பெரும்பாலும் விவசாயம் .. இங்குள்ள கோழி பண்ணைகளுக்கு அதன் தீவனம் அரைப்பதற்கு இங்கிருந்துந்தான் எடுத்துசெல்ல படுகிறது .. மாடு கன்றுகளுக்கும் சோள இலைகள் தண்டுகள்தான் உணவு இங்கே .. அது கொடுக்காப்புளி மரம் யா , எனக்கு வேணாம் என்று சொல்லிமுடிக்கும் முன்னே சார் கொஞ்சம் அதுக்கு பின்னாடி பாருங்க என்றார் செய்கையிலே .. வாய்மூடாமல் பேசுமிவர் ஒருவேளை செய்கையில் பேசுவதை என்னிடமிருந்து கூட இவர் கற்றிருக்கலாம்.. ஆம் கொய்யா மரந்தான் ஆனா நாம எப்படி எடுக்கிறது ? திருடவா ? நான் வரல என்றேன் .. சார் திருட்டு வேலைனா உங்க குப்பிடுவேனா என்று .. இருங்க வரேன் என்று வேகமாக உள் சென்றார் மீண்டும் பின் திரும்பி நிற்க வேண்டி செய்கை செய்து சென்றார் .. சற்று விலகி அவருடன் ஒரு குழந்தையும் சேர்ந்துக்கொண்டது .. அது அந்த வீட்டு பெண் குழந்தைதான் .. பதிமூன்று அல்லது பதினைந்து வயதிருக்கும் .. யாராய் இருந்தாலும் அதை பார்ப்பவர்களுக்கு குழந்தையாக தான் தெரியும் என்று நிச்சயம் சொல்லலாம் .. எந்த ஆடவன் கண்டும் ஆடைகளில் எல்லாம் சரியாக இருந்தும் திருத்தம் செய்யாவிடில் குழந்தை தானே அது .. பெரும்பாலும் நான் பார்த்த நாள் எல்லாம் ஆரஞ்சு நிற ஆடைதான் .. ஒருநாளும் பேசியதில்லை .. ஆடோ மாடோ மேய்த்துக்கொண்டிருக்கும் .. கோழியோ அதன் குஞ்சிகளோ சில நேரம் விளையாட்டிற்கு அதனுடன் .. அது அவரிடம் இருபதிருக்கும் மேல் கொய்யா க்கா பழங்களை பறித்து தந்து அனுப்பியது .. தூரத்தில் இருந்து என்னை பார்த்துக்கொண்டு பின் அது அதன் போக்கில் ஓரிரு காய்களுடன் சென்றது .. தன் சேலை முந்தானையில் மறைத்து கட்டி மகனுக்கோ மகளுக்கோ வீட்டிற்கு எடுத்து செல்லும் தாய்ப்போல தன் தலை துண்டில் போட்டு வயருடன் ஒட்டி ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தவர் அவராகவே ஏதும்கேக்காமல் மூன்று நான்கு பெருத்த காய்களாய் பார்த்து என் வண்டியின் பைகளுக்குள் வைத்தார் .. போய் சாப்பிட்டுவிட்டு இதை உங்கள் வீட்டில் வைத்து விடுங்கள் என்று சிரித்துக்கொண்டே போனார் ..
அந்த பச்சை தோல் கொண்ட கொய்யா காய்களை கண்டவுடன் ஏதேதோ ஞாபகம் எனக்கு ..
நானும் குழந்தையாகி போனேன். என்ன நிகழ்ந்ததோ அங்கு .. வண்டியை துவக்கியவுடன் ஒரு காய்யை எடுத்து திண்ண துவங்கினேன் .. எதை பற்றியும் கவலை இல்லை .. யார் செயலை நினைத்தும் வருத்தமில்லை .. எதோ என் சிறு வயதில் இருந்த பாளை மகாராஜநகர் d 106 வீடு ஞாபகம் வந்தது .. அங்கும் இது போல ஒரு கொய்யா காய் மரம் இருந்தது .. ஆம் இருந்தது என்று தான் சொல்லவேண்டும் .. நாங்கள் இருந்த வீட்டின் பின் புறத்தில் இருந்த சுற்று சுவர்களை உரசிக்கொண்டே வளர்ந்த மரம் அது .. எல்லோருக்கும் அங்கு இருந்த மாங்காய் மரத்தின் மீது ஓர் கண்ணிருக்க எனக்கு மட்டும் அந்த கொய்யா மரந்தான் எப்பொழுதும் .. சிறுவயதில் இருந்தே நான் விளையாடும் மரமும் அதுவே .. அப்போது சிறு வயதில் எனக்கு என்னவோ அந்த மரத்தின் மீது ஓர் பிரியம் .. விரும்பும்போது எல்லாம் நான் குரங்காய் தொங்குவதும் , சறுக்கி விளையாடுவதும், ஊஞ்சல் போல் ஆடி மகிழ்ந்து விளையாடுவதை என் அண்ணன் கண்டிருக்கலாம் .. ஆனால் ஒரு போதும் அவன் என்னுடன் இங்கு அமர்ந்ததாய் ஞாபகம் இல்லை .. ஓரிரு முறை என் அப்பா என் ஆசைக்காய் வந்து என்னுடன் விளையாண்டு போவார் .. சிறு வயதில் காலை பல் துலக்கும் முன்பே வந்துவிடுவேன் இந்த மரத்திடம் ..பள்ளிக்கு செல்ல நேராமானாலும் வரமாட்டேன் . அந்த ஐந்தாறு வயதுகளில் எனக்கு நேரம் பற்றிய எந்த அவிப்பிராயமும் கிடையாது .. நான் பாக்கும் போது எல்லாம் என் நினைவு தெரிந்து அண்ணன் விளையாண்டது அவர்களின் படிகளில் சீட்டு , அவரின் வாசலில் கிரிக்கெட்டும் தான் .. அவர்கள் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள் பல நேரங்களில் என்பது ஒருவித பெருமையே இப்பொழுதும் கூட ..
இப்போதும் காலத்தை மறந்துப்போனேன் .. நான் தனியே போனாலும் தனியாய் போகவில்லை .. காலத்தையும் நேரத்தையும் எங்கோ துலைத்து விட்டேன் .. மகிழ்ச்சிதான் அதில் எனக்கு .. அந்த கொய்யா மரத்திற்கு பதிலாய் ஒரு வாகனம் .. இருப்பினும் நான் சென்றது என்னவோ அந்த பழைய வீட்டு கொய்யா மரத்தின் முதுகில் தான் என்னை பொருத்தவரை ..
வழியில் சென்றவர்கள் எல்லாம் புன்னைகைத்தார்கள் .. நானும் கூட .. அந்த ஒற்றை கொய்யா க்காய் என்னையும் எதிரில் வந்தவர்களையும் குழந்தைகளாய் மாற்றின .. தொட முடியாத கடந்தக்காலந்தான் .. பெறமுடியாத குழந்தை பருவந்தான் ... ஒரு கையில் கொய்யாக்காயுடனும் மறுக்கையால் வாகனத்தை நகர்த்தியும் செல்லும் போது எதிரே தெரிந்த தொடுவானுடன் சிறு உரசல்கள் ..
No comments:
Post a Comment