மனம் மரிக்க வேண்டி 1
சொல்வதற்கு நிறைய உண்டு
பேசுவதற்கு ஒன்று மில்லை
எல்லோருக்கும் கா துண்டு
கேட்பதற்கு திற னில்லை
வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்ட நோயிங்கு
வட்டத்துக்குள் சிக்கமறந்த மனமங்கு
தன்னிலையில் விருப்ப மினினும்
எந்நிலையிலும் மாற்ற மில்லை
ஊர்க்கூடி தெருவி லங்கே
தெருக்கோடியில் நானு மிங்கே
நன்றோ தீதோ எதுவரினும்
நின்றுப் பார்க்க ஆசையுண்டு
செயலிழந்த கால்கள் மட்டும்
வழித்துணையாய் வந்து போகும்
கண்ணுறங்கும் நேரம் வரை
நெஞ்சுக்குள் தீ கொழம்பு
மண்ணுக்குள் போகும் வரை -பாவி
மனம் படுந் துயரம்
வினையென்று வாழும் வாழ்வில்
துணைக்கொள்ள ஏதுமில்லை
துணைக்கொள்ள ஒன்றி ருந்தால்
வினை யென்று வீழும்மனம்
மனமென்று ஒன்றி ருந்தால்
மரணம்வரை துயர் நீளும்
No comments:
Post a Comment