ரொம்ப நாள் அப்புறம் கதை ஒண்ணு சொல்ல போறான் அவன் ..
வழக்கம் போல அது அவன் கதை தான் ..
அருணாச்சலம் அவர் பெயர் . பதினைந்து வருடம் கட்டிட வேலையில் அனுபவமுள்ளவர் ..
தன் முப்பதின் இறுதியிலோ அல்லது நாற்பதின் துவக்கத்திலோ இருக்கலாம் வயது அவருக்கு .. பணியிட மாற்றம் பெற்று இரண்டு மாதம் முன்பு வெள்ளக்கோவில் அருகே உள்ள இந்த சைட் க்கு வந்த பிறகு தான் பழக்கம் .. இவன் அதே நிறுவனத்தின் மற்றொரு சைட் யில் சக சைட் மேற்ப்பார்வையாளனாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறான்.. இந்த இரு சைட் க்குமான தூரம் 40 மைல் இருக்கலாம் ..
முதல் முறை யாக சந்தித்துக்கொள்ளும் போது தன் தற்போதைய உதவி மேற்பார்வையாளர் ஒன்றுக்கும் உதவாதவன் , அவனால் எந்த பிரயோஜனமுமில்லை என புழம்பிதீர்த்தார் அவனிடம் .. அந்த உதவி மேற்பார்வையாளர் பெயர் தினேஷ் . இவரை போலவே டிப்ளமோ முடித்திருக்கிறார் . ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும் படித்து முடித்து .. இந்த இருவருக்குமிடையே ஒரு பெரு வித்தியாசமும் இல்லை உண்மையில் ..
இருவருக்கும் வேலை செய்ய கசக்கும் .. கடன் என்பது இவர்கள் பாராம்பரியம் .. கடனாக இருக்கட்டும் என்று கிடைத்தவரிடமெல்லாம் காசு வாங்குவார்கள் .. லேபர் (labour) கணக்கு பொருள்கள் கணக்கு என எல்லாவற்றிலும் ஊழல் .. ஆனால் இவரை பொறுத்தவரை அவன் மோசம் , அவனுக்கோ இவர் ..
இவன் தெருவில் ஒரு பொண்ணு போனாலும் பின்னாடியே செல்லும் காமன் ..
அவரோ செல் போன் மூலம் இணையத்திற்கு போக தெரியாமல் நெட் கார்ட் போட்டு யார் யார் இடமோ கேட்டு நெட் யில் செல்ல கற்று செக்ஸ் படம் பார்ப்பவர் .. கடன் வாங்கி குடிப்பவன் அவன் .. பிறரை ஏமாற்றி அவர்களின் காசில் குடிப்பவர் இவர் ..
இவர்களுடன் இருந்த ஒரு வாரம் தான் இந்த கதை .. கதையின் தவிர்க்க முடியாத பகுதியாக அவரின் கெட்ட வார்த்தைகள் .. சமூக வலைதளம் என்பதற்காய்
---(dash) இட படுகின்றன .. உங்களுக்கு பரிச்சயப்பட்ட பொருத்தமான வார்த்தைகளை கொண்டு நிரப்பிக்கொள்ளுங்கள் .
ஏன்ப்பா ஏய் தினேஷ் போய் சைடு அடிச்சாச்சா னு பாரு பா.. இவன் ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டான் _________ . இன்னைக்கு ஸ்லாப் கான்க்கிரிட்(slab concrete ) பா இவன வச்சி பிரயோஜனம் இல்ல அதான் உன்ன கூப்டேன் .. ஒரு ரெண்டு நாள் இருந்து கான்கிரிட் போட்டு பில் (bill ) எடுத்து கொடுத்துட்டு போ பா கண்ணு ..
பின் சைட் க்குள் என்ன பா பண்ற _____ சிக்கரம் போடு பா .. ____.._____..
இவனுங்க ஒரு வேலையும் உருப்படியா பண்றதில்ல .. நீ போய் மட்டம் சரி பாரு பா ..
அப்படியே எவளோ சிமெண்ட் ஆகும்னு பாரு பா ..
அண்ணா இந்த சார் ரொம்ப மோசம் னா .. ஒரு வேலையும் பண்ண மாட்டுக்காரு .. சும்மா எல்லாரையும் கெட்ட வார்த்தைல திட்றாரு .. எரிச்சலா வருது .. நீயே பாரு னா ..
சார் இந்த சார் ஏன் சார் இப்படி இருக்காரு காசு தர மாட்டுக்காரு என்பார் மேஸ்திரி ..
இவர்கள் எல்லோருக்குமான அவனின் பதில் .. சரிங்க விடுங்க .. நான் பாத்துக்கறேன் ..
அவன் இந்த சமீப கால வாழ்வு அவனுக்கு நிதானமும் பொறுமையும் எல்லாரையும் சமமாக மதிக்கும் பண்பையும் அதிக படுத்திவிட்டது ..
அவர் அவனை மட்டும் கெட்ட வார்த்தையில் அழைக்க மாட்டார் .. பொறியியல் முடித்தவன் என்ற மதிப்போ அல்லது இவன் பிரச்சனைக்குரியவன் என்ற எண்ணமோ இருக்கலாம் .. அவன் அப்படி தான் .. யாரிடமும் அதிகம் பேச மாட்டான் .. தன்னை பற்றி யாரிடமும் வெளிக்காட்டிக்கொள்ளவும் மாட்டான் ..
கண்ணு கான்கிரிட் ஆரம்பிச்சாசின்னு சொல்லிட்டேன் முதலாளிட .. எப்படியாது சிக்கிரம் போட ஏற்பாடு செய் என்பார் .. பின் முடிந்த உடன் அவர் போன் போட்டு அவரே போட்ட மாதிரி நல்லா பேசுவார் .. இது தெரிந்தும் அவன் அந்த வேலையை செய்வான் ..
தன் வேலை எல்லாம் முடித்த பின் அவனை மனமில்லாமல் அனுப்பிவைப்பார் . அவன் இரு சைட் யையும் எப்படியோ ஒரு வாரம் வேலைகளை செயல்ப்படித்திக்கொண்டு மெளனமாக திரும்பி செல்வான் அவன் சைட் க்கு , அவனின் அறைக்கு ..
அப்படிதாங்க இப்ப ஒரு வாரமா இருந்தேன் ..
இந்த அவனும் நான் தான் ..
இவர்கள் தான் என்னை மனிதர்களை விட்டு விலகி காட்டுக்குள் இருப்பது துன்பமில்ல பாக்கியம் னு புரிய வைக்கறவங்க ..
முடியல டா சாமி ...... ........
No comments:
Post a Comment