Pages

Sunday, 17 March 2013

எப்பொழுது இப்படை வெல்லும்


தமிழகம் முழுதும் வெவ்வேறு கல்லூரி மற்றும் தமிழ் உணர்வாளர்களால் தனி தமிழ் ஈழம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நிகழ்ந்து வருகிறது .. இப்போராட்டத்தின் ஆதரவாளர்களால் (நான் உட்பட ) இது அனைத்து  தரப்பு மக்களையும் சென்றடைந்தது அல்லது சென்றடைவது  போலவும் , எல்லா கட்சிகளும் நம்மைக்கண்டு அஞ்சுவாதாகவும் சொல்லப்படுகிற இந்தப்போராட்டம் உண்மையில் எதை செய்து முடித்துள்ளது , எதை செய்ய வேண்டியதுள்ளது என்பதே இந்த கட்டுரை ..

சில நாட்களாக  வெவ்வேறு தரப்பட்ட நண்பர்கள் மாணவர்கள் இளைஞர்கள் கிராம  பொதுமக்கள் நகர பொதுமக்கள் சில அரசியல் கட்சி சார்புடைய தோழமைகள்  சமூக சிந்தனைக்கொண்டவர்கள் , சிந்தனை இல்லாதவர்கள் என பலதரப்பட்ட தமிழர்கள் உடனான கருத்து கேட்டலும் பரிமாற்றமும் மட்டுமே இது .. இதை நான் எழுதுவது போலவே , ஏற்பதும் நிராகரிப்பதும் உங்களின் சுகந்திரம் இந்த கட்டுரையின் மனிதர்கள் போலவே ..


போராட்டம் துவங்கிய நாள் இரவில் என்னுடன் படித்த சில தமிழ் உணர்வு சமூக சிந்தனைக்கொண்ட நண்பர்களுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு இதில் பங்கெடுக்கும் அவசியம் பற்றி விவாதிதோம் .. 2009 ஆம் ஆண்டில் தவற விட்ட போராட்டம் மீண்டும் உயிர்ப்பெற்றிருப்பது எங்களுக்கு ஒருவித மகிழ்ச்சியும் உத்வேகத்தையும் ஏற்ப்படுத்திருந்தது .. போராட்டம் செய்த மாணவர் ஒருவர்க்கு அழைத்து வாழ்த்தினோம் .. இருப்பினும் 2009யின் ஞாபகம் இருந்தது .. இம்முறை இதில் பங்கேற்க விரும்பு தோழர்கள் பலரை ஒன்றுதிரட்ட முயற்சித்தோம் .. வழக்கம் போல சொற்பமாகவே முன்வந்தனர் .. இப்போது நாங்கள் மாணவர்கள் அல்ல ..  எல்லோரும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணியில் உள்ளோம் .. படித்து முடித்துவிட்டோம் .. மாணவர்களுடன் சேர்ந்து செய்ய முடியாது , தனியாக செய்வதா ?. நாங்கள் எங்கு ஒன்று கூடுவது .. எப்படி போராட்டத்தை முன் நிறுத்துவது .. சில போராட்டத்தில் பங்கெடுத்த இருவரிடம் இது பற்றி கேக்கலாம் என்று முடிவு செய்து அவர்களை தனிப்பட்ட முறையில் எங்களின் நிலைப்பாட்டை விவரித்து அணுகினோம் .. நாங்களும் போராட வேண்டும் என்று அவர்கள் விரும்ம்பினாலும் தனியே செய்ய முயற்சிப்பது உங்களை பிரச்சனையில் கொண்டு போய் விடும் அதே சமயம் நீங்கள் மாணவர்களுடன் பங்கேற்க முடியாவிட்டாலும் வேறு இயக்கங்களுடன் சேர்ந்து செய்யுமாறும் அல்லது மக்களுக்கு இதனை பற்றிய சிந்தனையை போராட்டத்தை கொண்டு செல்லுமாறும் சொன்னார்கள் ..

முதலில் என் கல்லூரியின் தற்போதைய மாணவர்கள் சிலருடன் இதை பற்றி விவாதித்தேன் . . அப்போது அவர்கள் பலவகைப்பட்ட பயத்துடன் இதுலாம் செய்ய முடியும் என்று நம்பிக்கையும் , நம் கல்லூரி அளவில் சாத்தியமானதும் என்று சொல்லமுடியாது வேண்டுமானால் நீங்கள் செய்யுங்கள் , யார் வருகிறார்களோ இல்லையோ நான் வருகிறேன் என்றனர் .. ஆனால் மறுப்பக்கம் போராட்டம் விரிவடைந்துக்கொண்டிருந்தது ..
மீண்டும் வேறு பல கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் சக நண்பர்களுடன் போராட்டம் பற்றி விவாதிக்க துவங்கினேன் .. இந்த போராட்டம் பற்றி என்ன நினைகிறீர்கள் என்றேன் .. பெரும்பாலும் அவர்கள் சொன்ன வார்த்தை "ஐ சப்போர்ட் (நான் ஆதரிக்கிறேன் )  ".. சரி அப்போது களம் காண்போமா வருவீர்களா என்றதும் பலரும் சொன்ன வார்த்தை " முடியாது ". ஒரு சிலர் மட்டுமே நான் அனைத்து மாணவர்களின் விருப்பமறிந்து பின் சொல்கிறேன் .. 
இங்கே தயக்கம் இருப்பது தெரிந்த விஷயம் தான் .. 2009யில் நாங்கள்  கேக்கும் போது கிடைத்த பதிலும் அது தான் .. நிருவாகத்தின் அச்சுறுத்தல் , குடும்ப நிலைமை , மாணவர்கள்  பின்வாங்கிவிட்டால் ? ஒரு வேலை இவன்தான் அனைவரையும் ஒன்றினைத்தான் என்று சிலரால் போட்டு கொடுக்க பெற்று பிரச்சனைகளில் தனியாக மாட்டிகொண்டால் ? இன்னும் பல கேள்விகள் .. இதற்க்கெல்லாம் ஒரே பதில் இப்போது போராடும் மாணவர்கள் எப்படி முன்னெடுத்து செய்கிறார்கள் , எப்படி மற்ற தோழமைகளின் ஆதரவு பெற்றார்கள் என்பது தான் .. 

இங்கே நான் பணிபுரியும் கிராமத்தில் உள்ள சில மனிதர்களின் கருத்துக்கள் 
அப்பாசாமி 55 வயது : சார் நீங்க சொல்றது சரிதான் , ஆனா நாம ஏன் போராடனும் .. கஞ்சி யாரு ஊத்துவா ? பொழப்ப பாக்க விடுங்க .. நீங்களும் போய் அதை செய்யுங்க ..

செல்வி 47 வயது: என்ன பசங்க போராட்டம் எதுக்காக ? ஈழம் பற்றி எடுத்து சொன்ன  பின்  அப்படியா எனக்கு தெரியாது என்றார் . . இப்போது நான் இதுலாம் சொல்லிய பின் இது பற்றி உங்களின் கருத்து என்ன என்று கேட்ட போது என்ன சொல்லணும் , நான் என் வேலைய செய்றேன் ,அவங்க அதை செய்றாங்க அதுக்கு நான் என்ன சொல்றது .. இல்ல நீங்க ஆதரிகேங்களா, நான் என் வேலை செய்றேன் அவளோதான் போப் பா .. (நானும் அவர் உடனே ஆதரிப்பார் என்று எதிர்ப்பாக்க வில்லை .. புதிதாக கேக்கப்படும் ஒன்றில் தனக்கென்று தனி கருத்து ஒருவருக்கு உடனே வருமென்று எதிர்ப்பார்க்க முடியாது ..) 

பலரும் ஒரு பெரிய ஆதரவாக பதில் தரவில்லை .. ஒரு வேலை அவர்கள் டெசோ ஆதரவாளர்கள் என்று படிப்பவர்கள் நினைக்க வேண்டாம் .. அவர்கள் பிரச்னையை அடுத்தவர்களுடையது என்று விலகி நின்றுப்பார்ப்பவர்கள் .. 

சரி படித்த இளைஞர்கள் என்று சிலரிடம் இது பற்றி கேட்டேன் :
ஒருவர் பெரிய கல்லூரி ஒன்றில் முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு , அவர் பதில் தான் என்னை இது பற்றி எழுத வேண்டும் என்று தோன்ற செய்தது .. அவர் சொன்னது , போராட்டமா எதுக்கு , நீங்க போராடுனா  இலங்கை ல மாறிறுமா ? எனக்கு கூட போராட ஆசை தான், லீவ் கிடைக்கும்  ஆனா பிரச்சனை வரும் கல்லூரி நிர்வாகம் ஏதாவது பண்ணிட்டா ? 

இவர் தான் இப்படி என்று இன்னொரு தோழரிடம்  கருத்து கேட்டேன் , அவர் உங்களுக்கு வேற வேலை ஏதும் இல்லனா இப்படி தான் பண்ணுவேங்க , போங்கடா என்று சில கெட்ட வார்த்தைகளுடன் வந்தது ..
அவரிடம் அப்போது  போராடும் சக மாணவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள் என்று கேட்டதற்கு , எல்லாம் கொழுப்பு வேற என்ன என்றார் .. (இது ஒரு வேளை தன் கையாளாகாத தனத்தின் காரணமாக அவர்களின் மீது உண்டான கோபமாக இருக்கலாம் .)

இருந்தாலும் பெரும்பான்மையான மாணவர்கள் சொன்னது , விருப்பம் தான் ஆனா பயமா இருக்கு .. தீடிர்னு கூட பண்ண பசங்க பின் வாங்கிடாங்கனா , இல்ல நிர்வாகம் ஏதும் சூழ்ச்சி பண்ணி எங்கள பிறிச்சிட்டாங்கனா , நாலு அஞ்சு பேர்  மட்டும் மாட்டி அவன் வாழ்க்கை போறதுக்கா ?..

இங்கே நாம் மூகநூலில் அனைவருக்கும் சென்று சேர்க்கப்பட்டதாக நினைக்கும் கருத்துக்கள் உண்மையில் ஒப்பிட்டு பார்க்கையில் மிக சொற்பமான மக்கள் மத்தியில் மட்டும் தான் போய் சேர்ந்துள்ளது .. 
இப்படிபட்ட சூழலில் இந்த போராட்டத்தை பல தரப்பட்ட மாணவர்கள் எடுத்து இருந்தாலும் , இங்கே நாம் பார்க்க வேண்டியது இந்த போராடாத பெரும்பான்மையான மக்களை போராட்ட களம் நோக்கி செல்ல கருத்துக்கள் கொண்டு சேர்த்து , அவர்களின் ஆதரவாலும் போராட்டத்தாலும் தான் இந்த போராட்டத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்பது தான் .. 

அதற்கு முதலில்  விருப்பம் இருந்தும் பயம் கொண்டு கல்லூரியின் நிர்வாகதிற்கு கட்டுப்பட்டு இருக்கும் இந்த பெரும்பான்மையான மாணவர்களை போராட்டத்துக்குள் இணைக்காவிட்டால் நிச்சியம் இது ஒரு பெரிய அளவில் அரசின் நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது .. எந்த அரசாங்கமும் குறிப்பாக இந்திய அரசும் தமிழக அரசும் கண்டுக்கொள்ளாது .. நாம் எற்றுகொள்கிறோமோ இல்லையோ நிலைமை இது தான் .. போராட்டத்தை எப்படி ஒருங்கிணைப்பது விரிவுப்படுத்துவது என்று சிந்தித்து முடிவெடுத்து செயல் பட வேண்டிய தருணமிது ..

Thursday, 14 March 2013

தொடுவானின் உரசல்கள்

  
மதிய வெயிலில் உணவு விடுதி நோக்கி செல்ல முற்படுகையில் எதிரே வந்தார் அப்பாசாமி .. வெத்தலை வாங்கிக்கொண்டு திரும்ப வருகிறார்.. அவர் என் கட்டிடத்தில் தான் வேலைப்பார்க்கிறார் .. ஐம்பதுகளை கடந்த எண்களில்  எதோ ஒன்று அவர் வயதாக இருக்கலாம் .. தளர்வான சட்டையும் வெண்ணிற வெட்டியும் எப்போதுமே, இங்கு வேலை செய்வதால் என்னமோ அது முழுதும் வெள்ளை என்று சொல்ல இயலாது .. என்னில் இருந்து இருபது அடி முன் தன் வண்டியை நிறுத்தினார் ... என்னையே பார்த்தார் .. என்ன ஐயா இங்க நின்னுட்டீங்க போய் வேலைய ஆரம்பியுங்க சீக்கிரம் , நான் போயிட்டு வரும்போது கான்கிரிட் போட்டு முடிச்சிருக்கணும் என்று சொன்னேன் .. பொதுவாகவே நான் யாரையும் அதட்டியோ திட்டியோ வேலை வாங்குவதில்லை ..  அதே போல சொல்லிவிட்டு சரி வரேன் என்றதும் ஓரிரு  கணங்களின் மௌனத்திற்கு பின் அவர் கேட்டார் சார் உங்களுக்கு கொய்யா க்கா வேணுமா ..

கொய்யா க்கா எங்க இருக்கு இந்த இடத்துல .. யார் தந்தா ? என்பதை உங்களுக்கு எது கொய்யா க்கா இங்க என்றேன் ? பொதுவாக எல்லா கேள்விகளையும் பதில்களையும் சுருக்கமாக சொல்லித்தான் பழகிவிட்டேன் வேலைக்கு வந்த தனிமைக்காலங்களில் ..
அங்க பாருங்க சார் என்று கண் காட்டினார் .. மாட்டு தொழுவம் .. சோள தட்டைகளின் வாசம் சாணமுடன் சேர்ந்து .. இங்கு சோள பயிர்கள் தான் பெரும்பாலும் விவசாயம் .. இங்குள்ள கோழி பண்ணைகளுக்கு அதன் தீவனம் அரைப்பதற்கு இங்கிருந்துந்தான் எடுத்துசெல்ல படுகிறது .. மாடு கன்றுகளுக்கும் சோள இலைகள் தண்டுகள்தான் உணவு இங்கே .. அது கொடுக்காப்புளி மரம் யா , எனக்கு வேணாம் என்று சொல்லிமுடிக்கும் முன்னே சார் கொஞ்சம் அதுக்கு  பின்னாடி பாருங்க என்றார் செய்கையிலே .. வாய்மூடாமல் பேசுமிவர் ஒருவேளை செய்கையில் பேசுவதை என்னிடமிருந்து கூட இவர் கற்றிருக்கலாம்.. ஆம் கொய்யா மரந்தான் ஆனா நாம எப்படி எடுக்கிறது ?  திருடவா ? நான் வரல என்றேன் .. சார் திருட்டு வேலைனா உங்க குப்பிடுவேனா என்று .. இருங்க வரேன் என்று  வேகமாக உள் சென்றார் மீண்டும் பின் திரும்பி நிற்க வேண்டி செய்கை செய்து சென்றார் .. சற்று விலகி அவருடன் ஒரு குழந்தையும் சேர்ந்துக்கொண்டது .. அது அந்த வீட்டு பெண் குழந்தைதான் .. பதிமூன்று அல்லது பதினைந்து வயதிருக்கும் .. யாராய் இருந்தாலும் அதை பார்ப்பவர்களுக்கு குழந்தையாக தான் தெரியும் என்று நிச்சயம் சொல்லலாம் ..  எந்த ஆடவன் கண்டும் ஆடைகளில் எல்லாம் சரியாக இருந்தும்  திருத்தம் செய்யாவிடில் குழந்தை தானே அது .. பெரும்பாலும் நான் பார்த்த நாள் எல்லாம் ஆரஞ்சு நிற ஆடைதான் .. ஒருநாளும் பேசியதில்லை .. ஆடோ மாடோ மேய்த்துக்கொண்டிருக்கும் .. கோழியோ அதன் குஞ்சிகளோ சில நேரம் விளையாட்டிற்கு அதனுடன்  .. அது அவரிடம் இருபதிருக்கும் மேல் கொய்யா க்கா பழங்களை பறித்து தந்து அனுப்பியது .. தூரத்தில் இருந்து என்னை பார்த்துக்கொண்டு பின் அது அதன் போக்கில் ஓரிரு காய்களுடன் சென்றது .. தன் சேலை முந்தானையில் மறைத்து கட்டி மகனுக்கோ மகளுக்கோ  வீட்டிற்கு எடுத்து செல்லும் தாய்ப்போல தன் தலை துண்டில் போட்டு வயருடன் ஒட்டி ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தவர் அவராகவே ஏதும்கேக்காமல் மூன்று நான்கு பெருத்த காய்களாய் பார்த்து என் வண்டியின் பைகளுக்குள் வைத்தார் .. போய் சாப்பிட்டுவிட்டு  இதை உங்கள் வீட்டில் வைத்து விடுங்கள் என்று சிரித்துக்கொண்டே போனார் ..

அந்த பச்சை தோல் கொண்ட கொய்யா காய்களை கண்டவுடன் ஏதேதோ ஞாபகம் எனக்கு ..
நானும் குழந்தையாகி போனேன். என்ன நிகழ்ந்ததோ அங்கு .. வண்டியை துவக்கியவுடன் ஒரு காய்யை எடுத்து திண்ண துவங்கினேன் .. எதை பற்றியும் கவலை இல்லை .. யார் செயலை நினைத்தும் வருத்தமில்லை .. எதோ என் சிறு வயதில் இருந்த பாளை மகாராஜநகர் d 106 வீடு ஞாபகம் வந்தது .. அங்கும் இது போல ஒரு கொய்யா காய் மரம் இருந்தது .. ஆம்  இருந்தது என்று தான் சொல்லவேண்டும் .. நாங்கள் இருந்த வீட்டின் பின் புறத்தில் இருந்த சுற்று சுவர்களை உரசிக்கொண்டே வளர்ந்த மரம் அது .. எல்லோருக்கும் அங்கு இருந்த மாங்காய் மரத்தின் மீது ஓர் கண்ணிருக்க எனக்கு மட்டும் அந்த கொய்யா மரந்தான் எப்பொழுதும் .. சிறுவயதில் இருந்தே நான் விளையாடும் மரமும் அதுவே .. அப்போது சிறு வயதில் எனக்கு என்னவோ அந்த மரத்தின் மீது ஓர் பிரியம் .. விரும்பும்போது எல்லாம் நான் குரங்காய்  தொங்குவதும் , சறுக்கி விளையாடுவதும், ஊஞ்சல் போல் ஆடி மகிழ்ந்து விளையாடுவதை  என் அண்ணன் கண்டிருக்கலாம் .. ஆனால் ஒரு போதும் அவன் என்னுடன் இங்கு அமர்ந்ததாய் ஞாபகம் இல்லை .. ஓரிரு முறை என் அப்பா என் ஆசைக்காய் வந்து என்னுடன் விளையாண்டு போவார் .. சிறு வயதில் காலை பல் துலக்கும் முன்பே வந்துவிடுவேன் இந்த மரத்திடம் ..பள்ளிக்கு செல்ல நேராமானாலும் வரமாட்டேன் . அந்த ஐந்தாறு வயதுகளில் எனக்கு நேரம் பற்றிய எந்த அவிப்பிராயமும் கிடையாது .. நான் பாக்கும் போது எல்லாம் என் நினைவு தெரிந்து அண்ணன் விளையாண்டது அவர்களின் படிகளில் சீட்டு , அவரின் வாசலில் கிரிக்கெட்டும் தான் .. அவர்கள் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள் பல நேரங்களில் என்பது ஒருவித பெருமையே இப்பொழுதும் கூட  ..  

இப்போதும் காலத்தை மறந்துப்போனேன் .. நான் தனியே போனாலும் தனியாய் போகவில்லை .. காலத்தையும் நேரத்தையும் எங்கோ துலைத்து  விட்டேன் .. மகிழ்ச்சிதான் அதில் எனக்கு .. அந்த கொய்யா மரத்திற்கு பதிலாய் ஒரு வாகனம் .. இருப்பினும் நான் சென்றது என்னவோ அந்த பழைய வீட்டு கொய்யா மரத்தின் முதுகில் தான் என்னை பொருத்தவரை ..

வழியில் சென்றவர்கள் எல்லாம் புன்னைகைத்தார்கள் .. நானும் கூட .. அந்த ஒற்றை கொய்யா க்காய்  என்னையும் எதிரில் வந்தவர்களையும் குழந்தைகளாய் மாற்றின .. தொட முடியாத கடந்தக்காலந்தான் .. பெறமுடியாத குழந்தை பருவந்தான் ... ஒரு கையில் கொய்யாக்காயுடனும்  மறுக்கையால் வாகனத்தை நகர்த்தியும் செல்லும் போது எதிரே தெரிந்த தொடுவானுடன் சிறு  உரசல்கள் .. 

சரித்திர மொன்று படைத்திட

மௌன துயரில் இருந்த 
நாங்கள் 
மந்திர புன்னகை இடுகிறோம் 

தந்திர அரசியல் செய்த 
நீங்கள் 
மரணிக்கும் நேர மிது 

எந்திர வாழ்வை துறந்த 
இளைஞன் 
சுகந்திர முழக்க மிடுகிறான்

சரித்திர மொன்று படைத்திட
மாணவன்
முந்தி செல்கிறது போராட்டம்

Wednesday, 13 March 2013

மனம் மரிக்க வேண்டி 4


இவ்விடம் சுகமில்லை 
இத்தொழில் சுவையில்லை 

எவ்விடம் போகத்துணிந்தும் 
தடைபெற்ற  நீரானேன் 

அணைகள் என்றறிந்தும் 
அலைகள் உறங்குவதில்லை 

தடுப்பணைகணூடே கொஞ்சம் 
கசிகிறது வாழ்வுமிங்கே 

மனம் மரிக்க வேண்டி 1


சொல்வதற்கு நிறைய உண்டு
பேசுவதற்கு ஒன்று மில்லை

எல்லோருக்கும் கா துண்டு
கேட்பதற்கு திற னில்லை

வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்ட நோயிங்கு
வட்டத்துக்குள் சிக்கமறந்த மனமங்கு

தன்னிலையில் விருப்ப மினினும்
எந்நிலையிலும் மாற்ற மில்லை

ஊர்க்கூடி தெருவி லங்கே
தெருக்கோடியில் நானு மிங்கே

நன்றோ தீதோ எதுவரினும்
நின்றுப் பார்க்க ஆசையுண்டு

செயலிழந்த கால்கள் மட்டும்
வழித்துணையாய் வந்து போகும்

கண்ணுறங்கும் நேரம் வரை
நெஞ்சுக்குள் தீ கொழம்பு

மண்ணுக்குள் போகும் வரை -பாவி
மனம் படுந் துயரம்

வினையென்று வாழும் வாழ்வில்
துணைக்கொள்ள ஏதுமில்லை

துணைக்கொள்ள ஒன்றி ருந்தால்
வினை யென்று வீழும்மனம்

மனமென்று ஒன்றி ருந்தால்
மரணம்வரை துயர் நீளும்

மனம் மரிக்க வேண்டி 2

கண்ணாடி உடைகிறது 
சத்தம் எழவில்லை !

காட்சிகள் வந்தபோதும் 
கண்ணுக்கு தெரியவில்லை !

கேள்விகள் தட்டும்போதும்
வாய் மட்டும் திறப்பதில்லை !

நெருப்புகள் சுட்டபிறகும்
உடலுக்கு ஒன்றுமில்லை !

வஞ்சனை வீசுங்காற்று
நெடியேற அறியவில்லை !

அனைத்தும் ஒத்துபோக
மனமுனக்கு என்னவேலை !!

மனம் மரிக்க வேண்டி 3

எந்நிலையில் பற்றில்லை 
அவ்விடத்தில் மனமுமில்லை 

செயல்வழி யோகமென 
கண்ணா நீ பொய்யுரைத்தாய் 

செயல் வலி துன்பமென
கண்ணா நீ அறிந்தில்லையோ??

உபதேசம் அர்ஜுனனுக்கே
கர்ணன் என்செய்வான் ??

வெள்ளை காகிதத்தில்


துன்ப கதையெழுத 
கோல் ஒன்று நானெடுக்க 

வெள்ளை காகிதத்தில் 
மேலே கருங்கோடு 

கிழே கைவைத்தால் 
செந்நிற மேடு 

Sunday, 10 March 2013

மனிதர்களை விட்டு விலகி காட்டுக்குள்

ரொம்ப நாள் அப்புறம் கதை ஒண்ணு சொல்ல போறான் அவன் ..
வழக்கம் போல அது அவன் கதை தான் .

அருணாச்சலம் அவர் பெயர் . பதினைந்து வருடம் கட்டிட வேலையில் அனுபவமுள்ளவர் ..
தன் முப்பதின் இறுதியிலோ அல்லது நாற்பதின் துவக்கத்திலோ இருக்கலாம் வயது அவருக்கு .. பணியிட  மாற்றம் பெற்று இரண்டு மாதம் முன்பு வெள்ளக்கோவில்  அருகே உள்ள இந்த சைட் க்கு வந்த பிறகு தான் பழக்கம் .. இவன் அதே நிறுவனத்தின் மற்றொரு சைட் யில் சக சைட் மேற்ப்பார்வையாளனாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறான்.. இந்த இரு சைட் க்குமான தூரம் 40 மைல் இருக்கலாம் ..

முதல் முறை யாக சந்தித்துக்கொள்ளும் போது தன் தற்போதைய உதவி மேற்பார்வையாளர் ஒன்றுக்கும் உதவாதவன் , அவனால் எந்த பிரயோஜனமுமில்லை என புழம்பிதீர்த்தார்  அவனிடம் .. அந்த உதவி மேற்பார்வையாளர் பெயர் தினேஷ் . இவரை போலவே டிப்ளமோ முடித்திருக்கிறார் . ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும் படித்து முடித்து .. இந்த இருவருக்குமிடையே ஒரு பெரு வித்தியாசமும் இல்லை உண்மையில் .. 

இருவருக்கும் வேலை செய்ய கசக்கும் .. கடன் என்பது இவர்கள் பாராம்பரியம் ..  கடனாக இருக்கட்டும் என்று கிடைத்தவரிடமெல்லாம் காசு வாங்குவார்கள் .. லேபர் (labour) கணக்கு பொருள்கள் கணக்கு என எல்லாவற்றிலும் ஊழல் .. ஆனால் இவரை பொறுத்தவரை அவன் மோசம் , அவனுக்கோ இவர் ..

இவன் தெருவில் ஒரு பொண்ணு போனாலும் பின்னாடியே செல்லும் காமன் ..
அவரோ செல் போன் மூலம் இணையத்திற்கு போக தெரியாமல் நெட் கார்ட் போட்டு யார் யார் இடமோ கேட்டு நெட் யில் செல்ல கற்று  செக்ஸ் படம் பார்ப்பவர் .. கடன் வாங்கி குடிப்பவன் அவன் .. பிறரை ஏமாற்றி அவர்களின் காசில் குடிப்பவர் இவர் ..

இவர்களுடன் இருந்த  ஒரு வாரம் தான் இந்த கதை .. கதையின் தவிர்க்க முடியாத பகுதியாக அவரின் கெட்ட வார்த்தைகள் .. சமூக வலைதளம் என்பதற்காய் 
---(dash) இட படுகின்றன .. உங்களுக்கு பரிச்சயப்பட்ட பொருத்தமான வார்த்தைகளை கொண்டு நிரப்பிக்கொள்ளுங்கள் .

ஏன்ப்பா ஏய் தினேஷ் போய் சைடு அடிச்சாச்சா னு பாரு பா.. இவன் ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டான் _________ . இன்னைக்கு ஸ்லாப் கான்க்கிரிட்(slab concrete ) பா இவன வச்சி பிரயோஜனம் இல்ல அதான் உன்ன கூப்டேன் .. ஒரு ரெண்டு நாள் இருந்து கான்கிரிட் போட்டு பில் (bill ) எடுத்து கொடுத்துட்டு போ பா கண்ணு .. 
பின் சைட் க்குள் என்ன பா பண்ற _____ சிக்கரம் போடு பா .. ____.._____.. 
இவனுங்க ஒரு வேலையும் உருப்படியா பண்றதில்ல .. நீ போய் மட்டம் சரி பாரு பா ..
அப்படியே எவளோ சிமெண்ட் ஆகும்னு பாரு பா .. 
அண்ணா இந்த சார் ரொம்ப மோசம் னா .. ஒரு வேலையும் பண்ண மாட்டுக்காரு .. சும்மா எல்லாரையும் கெட்ட வார்த்தைல திட்றாரு .. எரிச்சலா வருது .. நீயே பாரு னா .. 
சார் இந்த சார் ஏன் சார் இப்படி இருக்காரு காசு தர மாட்டுக்காரு என்பார் மேஸ்திரி ..

இவர்கள் எல்லோருக்குமான அவனின் பதில் .. சரிங்க விடுங்க .. நான் பாத்துக்கறேன்  .. 
அவன் இந்த சமீப கால வாழ்வு  அவனுக்கு நிதானமும் பொறுமையும் எல்லாரையும் சமமாக மதிக்கும் பண்பையும் அதிக படுத்திவிட்டது .. 

அவர் அவனை மட்டும் கெட்ட வார்த்தையில் அழைக்க மாட்டார் .. பொறியியல் முடித்தவன் என்ற மதிப்போ அல்லது இவன் பிரச்சனைக்குரியவன் என்ற எண்ணமோ இருக்கலாம் .. அவன் அப்படி தான் .. யாரிடமும் அதிகம் பேச மாட்டான் .. தன்னை பற்றி யாரிடமும் வெளிக்காட்டிக்கொள்ளவும் மாட்டான் .. 

கண்ணு கான்கிரிட் ஆரம்பிச்சாசின்னு சொல்லிட்டேன் முதலாளிட .. எப்படியாது சிக்கிரம் போட ஏற்பாடு செய் என்பார் .. பின் முடிந்த உடன் அவர் போன் போட்டு அவரே போட்ட மாதிரி நல்லா பேசுவார் .. இது தெரிந்தும் அவன் அந்த வேலையை செய்வான் ..

தன் வேலை எல்லாம் முடித்த பின் அவனை மனமில்லாமல் அனுப்பிவைப்பார் . அவன் இரு சைட் யையும் எப்படியோ ஒரு வாரம் வேலைகளை செயல்ப்படித்திக்கொண்டு மெளனமாக திரும்பி செல்வான் அவன் சைட் க்கு , அவனின் அறைக்கு ..

அப்படிதாங்க இப்ப ஒரு வாரமா இருந்தேன் ..
இந்த அவனும் நான் தான் ..

இவர்கள் தான் என்னை மனிதர்களை விட்டு விலகி காட்டுக்குள் இருப்பது துன்பமில்ல பாக்கியம் னு புரிய வைக்கறவங்க .. 
முடியல டா சாமி ...... ........