Pages

Saturday, 13 April 2013

ஆகாவழி கதை 2



கதை காலம் : 15 வயது  10ஆம் வகுப்பு
கதை களம் : ஆர் பி ஸ் கணித டியுஷன் மகாராஜநகர்
பொழுது: கதிரவன் கண்ணுறங்கும் நேரம் .. (நமக்கு எப்பவும் அமாவாசை தான்)

ஊருக்குள்ள நல்லா படிக்கிற பயனு ஒரு மருவாத இருந்துச்சி .. ஒழுங்கா நான் உண்டு படிப்பு உண்டுனு இருந்தேன்.. எங்கிருந்து தான் வருவாங்கலோ நமக்கு னு இவனுங்க.. மச்சான் நான் ஒரு புள்ளைய லவ் பண்றேன் னு ஒருத்தன் வந்தான் Hari Ram .. அதுக்கு என்ன டா மாப்ள நல்லா பண்ணு ...

அந்த புள்ள இது சொன்னா அது சொன்னா னு தினமும் கதை சொல்லிட்டு திரிஞ்சான் .. நாங்களும் கேட்டுட்டு இருந்தோம்.. ஒரு நாள் நல்லா போயிட்டிருந்த கதைல ட்விஸ்ட் .. திடிர்னு பிளேட் எடுத்து கைய கிழிக்கறது பேனா மைய குடிக்கறதுனு அலும்பு பண்ணிட்டான்.. என்னடா உன் சங்கதினு கேட்டேன் .. ஒரே ஒப்பாரி பாட்டா ஓடுச்சி ..
சரி நம்ம கூட பத்து வருஷமா படிக்கிற பயபுள்ள ஆச்சே ஏதாவது உதவி பண்ணட்டுமானு கேட்டேன்.. எனக்கு இப்ப மட்டும் இல்ல எப்பவுமே ஊர்ல இருக்கிற பயலுகளுக்கு உதவி பண்றதுனா உறுகாய் சாப்ட்ற மாதிரி.. (எப்பவும் சோத்த விட உறுகாய் அதிகம் சாப்டறவன் நான்)

ஊர் ஒண்ணு கூடிருச்சி .. மாப்ள நீ எதாவது பண்ணியே ஆகணும்டா .. நீ ஒரு அண்டர்டேக்கர் பேன் மாப்ள .. நீ தான் நல்லா யோசிப்பயே ஐடியா ஏதாவது பண்ணு மாப்ள.. இப்படி என்ன சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் உண்டு .. (இப்பவும் இருக்கு..)
சாயங்காலம் ஆறு மணிக்கு டியுஷன் ல சில புள்ளைக படிகித்துங்க னு சொல்வேயே அதுல கூட ஒரு புள்ள இவன் ஆள் பிரண்டு னு சொன்னான்ல. அது பெயர் கூட அஞ்சலி .. (பெயர் மாற்ற பட்டுள்ளது ) .. அதுட்ட போய் என்ன மேட்டேர்னு விசாரிப்போம் மாப்ள னு ஐடியா குடுத்தாங்க..

அந்த புள்ள சும்மாவே சீன் போடும் . அவ அப்பன் ஆத்தா டாக்டர் வேற..
ஒழுங்கா போயிட்டு இருந்த டியுஷன்ல இது வேறைய வம்பு .. நான் சொன்னேன் மாப்ள Siva Manian உங்க எதிர் வீட்ல உள்ள ஒரு பிகுர் இதுக்குதுல நம்ம டியுஷன் ல அது ட கேப்போம் டா னு சொன்னேன்.. இல்ல மாப்ள அது சரி பட்டு வராது வீட்ல சொல்லிடும் வேணாம் னு சொல்லிட்டான்..  சரி நாம நல்லது தான செய்ய போறோம் நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லன்னு கமல் சார் சொல்லிருக்காரே அப்புறம் என்ன செய்வோம் னு முடிவு பண்ணியாச்சி..

ரெண்டு நாள் மூனு நாள் ட்ரை பண்ணுனோம் ஆனா அந்த புள்ளைய புடிச்சி பேச முடியல .. அதுக்குள்ளே எங்க இந்த பிளேட் பக்கிரி ரொம்ப படுத்த ஆரம்பிச்சிட்டான் எல்லாரையும் .. ஒட்டு மொத்த எங்க கிளாஸ் பசங்களும் வந்துட்டாங்க ஆதரவு கரம் கொடுக்க.. ஆனா வழக்கம் போல நாம தான் திட்டம் போடணும் , செயல் படுத்தணும் . . தீயா வேலை செய்யணும் டா கொமாரு னு பல ஐடியா வந்துரிச்சி.. அந்த புள்ளைய மறை முகமா குப்ட்டு பார்த்தேன் வேலைக்கு ஆகல .. அதுக்குள இவன் அந்த புள்ளைய பாக்கிறான்னு ஒரு புரளி வேற நம்மள சுத்தி பரவ தொடங்கிடுச்சி .. இது அந்த புள்ளயும் நம்பி சீன் போட்றத இன்னும் அதிகம் ஆக்கிடுச்சி..

இது வேலைக்கு ஆகாது னு ஒரு அமைப்பு தொடங்கிட்டோம் .. அதுக்கு பெயர் ஆங்கிலத்துல ட்ரிபிள் எஸ்( எஸ் எஸ் எஸ்) .. என்ன அர்த்தம் னு கேக்கறேங்களா சுடிதார் செக்யூரிட்டி சர்வீஸ்.. அந்த அமைப்பு முக்கிய வேலை புள்ளைகளின் வீடுகளை கண்டறிவது தொலைபேசி எண்களை அறிவது என பெண்கள் பாதுக்காப்பு குறித்த அனைத்து பொறுப்புக்களும் அதில் உண்டு.. அதன் நிர்வாகிகள் Nagoor Mideen Rama Swamy Veera Mani Ganapathy Subramanian கஞ்சா கணேஷ் இன்ன பிற டியுஷன் நண்பர்கள்..

ஒரு வழியாக அந்த புள்ளையிடம் பேச வாய்ப்பு வந்தது . ஆனால் நேரம் பார்த்து இந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் அன்று தாமதம்.. போன் அடிச்சேன்.. சாரி மெசேஜ் அனுப்பினேன். நீயே டீல் பண்ணு மாப்பு வி ஆர் ஆன் தி வே னு ரிப்லே வந்துச்சி.. நாம தான் வீர தீர சூர பறாக்கிரம அண்டர்டேக்கர் பேன் ஆச்சே.. ஒழுங்கா நேர் வழில போய் பேச மாட்டோம் ல .. டியுஷன் வீட்டு சுவர் ஏறி குதிச்சி படி ஏற்ற புள்ளைய வழி மடக்கி "யே புள்ள இந்தா நில்லு டியுஷன் முடிஞ்சு வந்து கேளு உண்ட பேச வேண்டியது இருக்கு "னு சொல்லிட்டு படிக்க அனுப்பிட்டேன்.. அப்பக்கூட படிக்கறத தொந்தரவு பண்ற பழக்கம் எனக்கு இல்ல.. அட நம்புங்க பாஸ் மெய்யாலுமே நானும் படிக்கிற பய தான்..

வீர தீர செயல் செய்ய போன நான் எந்த மேட்டர் பத்தி பேச வேண்டியது இருக்குனு சொல்ல மறந்துட்டேன் .. போச்சா சொனமுத்தான் .. வழக்கம் போல நம்மள சுத்தி ஓடி புடிச்சி விளையாண்டுட்டு இருந்த கதை இப்ப உண்மைன்னு ஊர் வும் உள் மனசும் அவளுக்கு தந்தி அடிசிருக்கும் போல .. நிக்க சொன்னா நிக்கல.. நாம தன்மான சிங்கம் ஆச்சே விடுவோமோ நம்ம சைக்கிள் ல அவ ஸ்கூட்டி ய சேஸ் பண்றது அவ வீட்டு வாசல போய் நின்னு சீய்ட்டி அடிக்கறது..நம்ம அமைப்பு மூலமா வீட்டு போன் நம்பர் கண்டு பிடிச்சி போன் போடறது இன்ன பிற சடங்கு சம்பிரதாயம் அனைத்தும் செயல் படுத்தி (அந்த புள்ளைய பாட படுத்தி )
கதை போயிட்டு இருந்துச்சி ..
சரி நம்ம நடவடிக்கைகள தொடர்ந்து உற்று நோக்கி கொண்டிருந்த நல்ல உள்ளம் கொண்ட வகுப்பு நண்பர்களுக்கு கொஞ்சம் பாவமா கூட தோணல .. இன்னும் இன்னும் னு கொளுத்தி என் மூளைக்கு அடில வச்சி ஓட விட்டாங்க..

இந்த ரண களத்துல அந்த புள்ள அவ அண்ணனுக்கு எங்க டியுஷன் மாஸ்டர் க்கு அவ என்ன நினைச்சிட்டு இருந்தாலோ அதை சொல்லிட்டா.. அவ்வளோதான்.. ஊருக்குள்ள ரவுடி பொரிக்கி னு நல்ல பெயர் வந்துருச்சி.. எங்க மாஸ்டர் சும்மா வெறும் கையவே நக்குவாறு...  நான் இல்லாத நேரம் பார்த்து நண்பர்கள்ட அவன் கூட சேராதீங்க பா.. அவன் பொரிக்கி .. அவன் தான் உங்க கேங் லீடர் ஆ னு வறுத்து எடுத்திருக்காரு.. இதுல நான் அவர்க்கு சொந்தம்னு தெரிஞ்சு போச்சி.. உங்க அப்பாவ பார்த்தேன் னு ஒரு நாள் போட்டாரு ஒரு அணுகுண்ட.. அவ்வளோதான் .. அன்னைக்கு நான் வீட்டுக்கு எப்படி போன்னேன் னு நினைச்சா இன்னமும் சிரிப்பு சிரிப்பா வருது..

ஆமா இந்த கதைக்கும் ஏன் ஆகாவழி கதைனு பெயர் வந்துச்சினு பார்க்குறிங்களா.. அந்த பிளேட் பக்கிரி கடைசில என்ன தெரியுமாங்க சொன்னேன் .. அப்படி ஒரு புள்ளையே இல்ல .. எல்லாம் கதையாம்..

பி.கு: இந்த கதையை என் பள்ளி நண்பர்கள் டியுஷன் நண்பர்கள் , அந்த டியூஷனில் படித்த நல்லவர்கள் , என்னை போன்று உதவி என்றதும் அப்பாவி தனமாக ஓடி உதவி செய்து அவஸ்தை படும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்

Wednesday, 10 April 2013

ஆகாவழி கதை



ரெண்டு வாரம் சும்மா தான் இருந்தேன் இந்த சைட் க்குள்ள ஒரு பயலும் வரல.. நாம இண்டேர்விஎவ் போற நாள் பார்த்து வந்தாங்க
ஏட்டு அடி ஆழத்துக்கு பள்ளம் பறிக்கற வேலைக்கு கம்ப்றேச்சர் கொண்டுட்டு.. சரி இது தான் நம்மகு ஒதுக்கலைய அந்த பக்கத்து சைட் சூப்பர்விசர் தான வரணும் னு அந்த பக்கிக்கு போன் போட்டேன்.. ஆமா பா நாளைக்கு காலைல நான் அங்க இருப்பேன் சீக்கரம் வந்துரு நான் அவரு.. கொஞ்சம் நேரத்துல நம்மள இண்டேர்விஎவ் க்கு கேரளா வர சொல்லி கூப்ட அவருக்கு போன் போட்டு நான் லீவ் சாமி , நீங்களே பார்த்துக்கோங்க னு சொல்லி போய்ட்டேன்.. அஞ்சு அடி வட்டமா எடுக்க சொல்லிடு போயிருந்தேன்.. மறுநாள் வந்து பார்த்த பயபக்கி நாலர அடி தான் எடுத்து இருக்கு.. அந்த உயர்ந்த சூப்பர் விசர் ரும் வந்து பாக்கல.. நானும் அந்த பெரிய சூப்பர்விசர் ட கேட்டன் , ரொம்ப நல்ல மனுஷன் அவரு அது ஒன்னும் பிரச்சனை இல்ல, விட்ரு பா நம்ம சைட் க்கு உடனே வா பில் எடுக்கணும்னு கூப்பட்டார்.. நானும் போய்ட்டன்..
மிசின் வந்திருந்தது இந்த கதை நடந்தது நாலு அஞ்சி நாளுக்கு முன்னாடி..

நேத்து அந்த குழில வளையம் இறக்க வந்த ஆளு இதுலாம் முடியாது சார் .. அஞ்சு வேணும் .. குழி எடுத்து வைங்க வரோம் னு போய்ட்டாங்க..
சரி போன்னவங்க சும்மா போன்னாங்களா , முதலாளிக்கு போன் போட்டு குழி சிறுசா இருக்கு நாலு அடி கூட இருக்காது போல. எடுத்து வைங்க ரிங் எறக்கி தரோம் னு சொல்லிட்டாங்க.. எங்க முதலாளி தான் ரொம்ப நல்லவர் ஆச்சே சும்மாவே ஊருக்குள்ள மழை பெஞ்சா தெருவுள்ள நாய் தொரத்துன்னா நம்மட்ட தான் டென்ஷன் ஆவாரு (எவனாது வேலை செய்ஞ்ச காசு கேட்டு வந்தாலும் அப்படிதான்).. இது தான் வாய்ப்புனு சும்மா வெண்ணி அள்ளி ஊத்துனாரு .. நானும் போயா போ இன்னும் ஒண்ணு ரெண்டு நாள் தான் டி அப்புறம் இருக்கு ரிவிட் னு அமைதியா டீ குடிச்சிட்டே தம் அடிச்சிட்டே கேட்டுக்கிட்டு இருந்தேன்..

இந்த நிலைமைல சைட் ல லபௌர் ஒருத்தனும் கிடையாது.. முடிஞ்சு போன்ன சைட் னு அவளோ பேரையும் போட்டி தூக்கி குடுத்து வீட்டுக்கு அனுப்பியாச்சி.. கட்டடத்துக்கு தண்ணி விடற எங்க  லோக்கல் லபௌர் வர சொல்லி சரி இன்னைக்கு ஆள் புடிச்சி வேலைய முடிப்போம் னு ஊர் க்குள்ள அழைஞ்சா ஒரு பயலும் வர மாட்டேன் குறான்.. கேட்டா அமாவாசை யாம்..

நாசமா போச்சி நம்ம பொழப்புன்னு நானே மண்வெட்டி கடப்பாரை தட்டு எடுத்து குழி க்குள்ள இறங்கிட்டன்..
"எலிக்கு என்ன வேலை மண்ணு பறிக்கிற வேலை
பூசாரிக்கு என்ன வேலை மணி அடிக்கிற வேலை
 சூப்பர்விசர் க்கு என்ன வேலை சும்மா இருக்கிற வேலை "
அப்படிங்கற தத்துவத்த நம்பி கிடந்தவனுக்கு
உச்சி நட்டுக்கிச்சி
உள்ளங்கை பிச்சிகிச்சி
உச்சில வேர்த்து கால் சட்டை நனைச்சி மண்ல போகுது நீரு,

திசை தெரியாம குழி க்குள்ள  மண்ணு பறிக்கு இந்த கேலட்டு மனுஷன் நம்மக்கு அப்ப தான் ஐடியா சொல்றாரு..
"தேம்பரம்(தெற்கு பக்கம்) மேடு
வடவரம்(வடக்கு பக்கம்) கோடு
கெலவரம்(கிழக்கு பக்கம்) போடு
மேவரம்(மேற்கு பக்கம்) மாட்டு"
எந்த திசை ல இருந்துயா வந்த நீ
அய்யா சாமி இப்படி நீ தெச சொன்னா நான் போய்டுவேன்  ..
ரெண்டு பெருமா சேர்ந்து அஞ்சு அடி வட்டத்துக்கு குழி எடுத்து மண் அள்ளி தூக்கி குடுத்து வெளில கொட்டி
ஒரு வழியா அவங்க சாயங்காலம் வர்றதுக்குள்ள ரெடி பண்ணி முடிச்சிடோம்

ஆமா இந்த கதைக்கு எதுக்கு ஆகாவழி கதை னு பெயர் வச்சன்னு யோஷிக்கேங்களா.. காசு வாங்கிட்டு ஒழுங்கா வேலை செய்யாத கம்ப்றேசர் காரன்.. வரவேண்டிய சூப்பர்விசர் வராம இருந்தது மட்டும் இல்லாம அவருக்கு பில் எடுக்க கறி வலிச்சி நம்மள வரவைக்க எல்லாம் சரிதான்னு போய் சொன்ன அந்த பக்கி . லபௌர் எல்லாரையும் ஊர்க்கு அனுப்புன முதலாளி.. அமாவாசை கதை சொல்ற ஊர்க்காரங்க.. இந்த ஆகாவழி பேர்வழிகள நம்பி பொழப்பு கேட்ட நான் மட்டும் வேற யாரு.
அதான் கதைக்கு என் பெயரே வைச்சிடேன்..

பின் குறிப்பு: பார்த்த வேலைக்கு ரெண்டு லபௌர் கணக்கு காட்டி காசு கண்டிப்பா வாங்கிடுவேன். உபரி உற்பத்தி உபரி இலாபம் இது எப்பவும் இருக்க கூடாது னு நினைக்கிற சொசியளிஸ்ட் நாங்கோ..

Tuesday, 2 April 2013

தேவன் அடியாள் எனவானேன்

பெற்றதோர் பெண்மகள் யாவரும் அறிந்தனர் 
புணர்ந்ததோர் ஆண்மகன் நீவரும் உணர்ந்தனல் 
யார்செய்த பாவமென யார்பெயரும் அறிகிலன் 
ஊர்மொழிந்த பெயர்களாய் என்பெயராய்  யாம்  பெற்றேன் 
முன்மொழிந்த பெயர்களையே தொழிலாய் யான் கற்றேன் 
உன்மக்கள் பசி தீர்க்க நான்வந்தேன் 
தேவன் அடியாள் எனவானேன் 

கனவு கதைகள்

 நேரம் தவறாமல் வருபவன் நான் ... நேரம் கடந்தே வந்த உன் காதல் ..
சிக்னல் க்காக காத்திருக்கும் பேரூந்து .. சிணுங்களில் காதல் சொல்லும் நீ ..
எப்போது வந்தாய் என் இருக்கையின் இட இருக்கைக்கு ..
உலகை பார்த்து செல்பவன் உனை காண்கிறேன் 
என்னிடத்திலே உலகை காண்பதாய் நீ ..
வழி மாறி வந்தவளோ இடமாறி அமர்ந்தவளோ 
கதை சொல்ல வந்தவளோ கவிதை பூ தொடுப்பவளோ 
எதுவென்று அறியுமுன்னே 
காது கடிக்கிறாய் கன்னம் தடவுகிறாள் 
காதல் கவிதை உடலில் எழுதுகிறாய் ..
கூட்டம் மறைந்துபோக கூத்தாடி நானாக 
கூடி களவுகளில் கண்கள் மூடுகிறாய் 
கண்கள் திறக்கும்போது போகிறாய் என்செய்ய !

Monday, 1 April 2013

வண்ணங்கள் இழந்த


என் கால்களில் இருந்த செருப்பின்
சிவப்பு மஞ்சள் வண்ணம் கண்டு சிரிக்கிறார் அவர்

அவரின் தோள்களில் இருந்த பல வண்ண துண்டை
கண்டு நானும்

இருவரையும் கண்டும் காணாமல் சிரிக்கிறார்
சுவர்களில் ஏதோ கட்சி யின் வண்ணமிடும் முதியவர்

அனைவரிடமும் சிரிக்கிறது
தார் சாலையின் வெள்ளை கோடுகள்

எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்க்கிறது
வண்ணங்கள் இழந்த சாலையோர சிறுமி