அங்கே யாவரும் இருந்தனர். யாரென்று யாரும் சொல்ல விழையாதவாறு யாவரும் அங்கே
இருந்தனர். போதை மட்டுமே வாழ்வென்று யாவரும் இருந்தனர். அங்கே உணவுக்கு
யாரும் உழைக்க வேண்டியதில்லை. மண்ணும் வானும் பிரித்தறிய இல்லாத ஒன்றாய்
வண்ணமும் பார்வையும் போல இருந்தன. காமம் எங்கோ வாழ்வின் தேவையாக உடலின்
இயல்பாக மருவி இருந்தது. மக்களின் தேவையெல்லாம் வாழ்விற்கு அப்பால்
இருந்தது. மதுவை தவிர வேறெதுவும் அவர்களை வதைக்காது இருப்பில்லை. அவர்கள்
வேறொரு பூமியை தருவித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே தாயும் தந்தையும்
குழந்தையும் போதுவாக இருந்தனர். கனவுகளின் கடவுள் மட்டும் வாழ்ந்துகொண்டு
இருந்தான். அவனை வணங்க மதிக்க பூஜிக்க யாருமில்லை. அவனும் தேடிக்கொண்டு
இருந்தான் வாழ்வுக்கு அப்பால் வேறொன்றை.
No comments:
Post a Comment