Pages

Friday, 3 April 2015

அது 2006. மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் தொடக்கமாக இருக்கலாம். எனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இறுதி பரிட்சை - சமூக அறிவியல் அன்று. தேர்வு முடிந்து எங்கேயாவது போக திட்டமிட்டு, படம் பார்க்கலாம் என்று முடிவானது. தற்பொழுதய மக்கள் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்ய நெல்லை க்கு வருகை தந்த தருணம். அது தெரியாமல் படம் செல்ல முடிவெடுத்து அரை மணி நேரத்திற்கு மேலாக முருகன்குறிச்சி யில் பஸ் நிற்க, மேரி சார்ஜண்ட் பள்ளி அருகே விவரம் அறிந்து இறங்கிக்கொண்டோம். படம் போட 15 நிமிடம் மட்டுமே உள்ளது. முன் வைத்த காலை பின்வைக்கலாகாது என்று உணர்ச்சி கொண்டு வண்ணாரப்பேட்டை பை பாஸ் ரோடு வரை நடந்து (ஓடி) சென்று, பின் பை பாஸ் ரோடில் ஓட , அந்த வழியாக சென்ற ஒரு குட்டி யானையில்(Tata ace) அனைவரும் ஏறி சமயத்தில் ராம் முத்துராம் தியேட்டர் அடைந்து வெற்றிகரமாக பார்த்த படம் தலைவர் ‪#‎எஸ்‬.ஜே.சூர்யா அவர்களின் கள்வனின் காதலி.
இப்போது அவரின் இசை வந்துள்ளது. ஆனால் அப்போது படம் ஒருவனும் அருகில் இல்லை. நீங்கலாம் இல்லாம எப்படி தனியா படம் பார்க்க?

நான் குடித்துக்கொண்டு இருக்கிறேன்

மிச்சமொன்றும் இல்லை
நான் குடித்துக்கொண்டு இருக்கிறேன்
கனவு நிராசை
ஒழுக்கம் ஞானம்
தனிமை வெறுமை
முயற்சி முதிர்ச்சி
கொள்கை காதல்
அயர்ச்சி அதிர்ச்சி
தன்மை பன்மை
மிச்சமொன்றும் இல்லை
நான் குடித்துக்கொண்டு இருக்கிறேன்.

சமன்பாடற்ற ஆசை

இந்த மனிதர்கள் யாரென்று
தெரியவில்லை
தங்கள் இருப்பை
நிரூபிக்க
உயர்வை தருவிக்க
வாழ்வை
வளப்படுத்தி கொள்ள
கிளை பறப்புகிறார்கள்

அவர்களின் வேர்கள் என்னவோ
சமன்பாடற்ற ஆசையின்
மீது தான் .

கண்ணாடி பார்த்துக்கொள்கிறேன்

இரண்டொரு முறை
கண்ணாடி பார்த்துக்கொள்கிறேன்
இது என்
இலையுதிர்காலம்
கீழே சிந்திய முடிகளை
எண்ணிப்பார்ககிறேன்
கையிலெடுக்கிறேன்

சாம்பல்நிற பறவையொன்று
வாசலில் சிலிர்க்கிறது
இறகடிக்கிறது
பறந்து சென்றது
இப்பொழுது சாம்பல்நிற
இறகு என் கையில்
இனி உங்களிடம் சொல்ல
ஒன்றுமில்லை
இது
வசந்தகாலமும் தான்
என் சிறகை பரப்பி
முதிர்ச்சியை அடித்து
பறக்கும்
தருணமிது..

கனவு

சோறு கண்ட இடம் சொர்க்கம் னு
சொன்னவன் ஏதோ ஒரு வகை ல
அவன் வாழ்க்கை ல கண்ட கனவு
கனவு மட்டும் தான் னு புரிஞ்சவன் தான்

வாழ்வுக்கு அப்பால் வேறொன்றை

அங்கே யாவரும் இருந்தனர். யாரென்று யாரும் சொல்ல விழையாதவாறு யாவரும் அங்கே இருந்தனர். போதை மட்டுமே வாழ்வென்று யாவரும் இருந்தனர். அங்கே உணவுக்கு யாரும் உழைக்க வேண்டியதில்லை. மண்ணும் வானும் பிரித்தறிய இல்லாத ஒன்றாய் வண்ணமும் பார்வையும் போல இருந்தன. காமம் எங்கோ வாழ்வின் தேவையாக உடலின் இயல்பாக மருவி இருந்தது. மக்களின் தேவையெல்லாம் வாழ்விற்கு அப்பால் இருந்தது. மதுவை தவிர வேறெதுவும் அவர்களை வதைக்காது இருப்பில்லை. அவர்கள் வேறொரு பூமியை தருவித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே தாயும் தந்தையும் குழந்தையும் போதுவாக இருந்தனர். கனவுகளின் கடவுள் மட்டும் வாழ்ந்துகொண்டு இருந்தான். அவனை வணங்க மதிக்க பூஜிக்க யாருமில்லை. அவனும் தேடிக்கொண்டு இருந்தான் வாழ்வுக்கு அப்பால் வேறொன்றை.
வாழ்வைபோல் ஒரு துயருமில்லை
வாழ தெரிந்தால் துயரமில்லை