இப்போதெல்லாம்
தீடிர்யென ஒரு நாள் மாலை வெயிலில் ஒரு பைக் பயணம்.
கல்லறையின் அமைதி அவன் செவியில்.
மரணத்தின் ஓலம் அவனின் மூடப்பட்ட இதயத்தின் வைப்பறையில்.
கடந்து சென்ற காற்று எல்லாம் சோகத்தின் மொழியை சொல்லிக்கொண்டு செல்கின்றன.
தென்னை மர கிற்றுகள் எல்லாம் காற்றிலே இறந்து போன பட்டாம்பூச்சியை போல் அசைந்துகொடுக்கின்றன .
அந்த தார் சாலைகள் எல்லாம் மரண ஊர்வலத்தை பதிவு செய்யும் கரிய காகிதமாய் தெரிந்து .
எதற்காக செல்கிறான் வீட்டுக்கு என்பது அர்த்தமற்றதாய் அர்த்தமுள்ளதாய் இல்லாமல் தினசரி கடமையில் ஒன்றாகிப்போனது.
அந்த வீட்டிற்கும் அலுவலகதிற்குமான வேற்றுமை கதவு மட்டும் தானே அன்றி
இரண்டிலும் இவன் ஒருவனே .
பயணத்தின் எல்லா திசைகள்ளிலும் சவபட்டி தான் அதுவும் அவரவர் உடல்களை அவரவர்களே கொண்டுசென்று வைக்கின்றனர் என்ற பிரம்மை.
அந்த பைக் அவனால் இயக்கப்படவுமில்லை நிறுத்தப்படவுமில்லை அதுவும் அதுவாகவே இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்று மனம் சொல்லியது.
கடந்து செல்லும் நாய்களும் பூனைகளும் மனிதர்களும் வெறும் சுவரொட்டியின் படங்களாகவே தோன்றியது , பேசுவதற்கு ஒன்றுமில்லை .
அந்த கடைக்காரர் கூட அவனை கண்டதுவும் தானாகவே சிகரட்டை எடுத்து கொடுத்து விட்டு டீ போட சென்றுவிட்டார் , கேட்பதற்கு ஒன்றுமில்லை.
மகிழ்ச்சியின் எல்லையில் மௌன பரவசம் ,
தனிமையின் இறுதியில் சோககீதம் ,
டீ யை தந்து விட்டு வானொலியை போட்டு சென்றார் .
இப்போது அதுவும் இவனின் கடந்த கால நினைவுகளும் பாடிக்கொள்கிறது அதனதன் இதயத்தில் , வானொலியும் இவனும் அசையவே இல்லை.
அந்த பாடலை எழுதியன் யார் ?,
இப்படியொரு சோக பாடலை அவன் சோகத்தில் எழுதிருப்பானா அல்ல என்றோ சுவைத்த தோல்வியை நினைத்து எழுத முடியுமா ?
ஒரு வேளை அவன் முடிந்ததை நினைத்து எழுதினால் , எழுதி முடிக்கும் போது அவன் சோகத்தில் இருப்பானா அல்லது தீர்ப்பு தந்ததும் உடைக்கப்படும் பேனா போல உடைந்துபோய்விடுமா ?
முறிந்த சிறகுகளை எழுதிய பின் கலீல் கிப்ரான் க்கு புதிய சிறகுகள் வந்திருக்கம்மா , அல்ல அல்ல முறிந்த சிறகுடனே பறந்திருப்பாரா ?
நிலா பார்த்தல் புத்தகத்தில் இறுதி புள்ளியை வைக்கும்போது அவருக்கு மனதில் என்ன தோன்றி இருக்கும் அமாவாசையா ? பௌர்ணமியா ?
இப்படி எழுந்த கேள்விகளுக்கு விடையறிய கேட்கவோ பேசவோ யாரும் இல்லை அவனுடன்
யாரும் இருந்தாலும் கேட்பதில்லை இப்போதெல்லாம்
No comments:
Post a Comment