ஒரு கட்டிட தொழிலாளி மேல் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ,
தம்பி என்ற உறவில் ஒருவர் வந்தார் ...
எதற்கு வந்தார் என்பதை தவறாக புரிந்துக்கொள்ளவேண்டாம்
தொடர்ந்து படியுங்கள்
இரண்டு கட்டிட மேற்பார்வையார்கள் இரண்டு மருத்துவமனை சென்று போராடி பின் மருத்துவர்கள் கைவிட
கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ..
மாலை நேரம் வாக்கில் வந்த அந்த உறவினர் ( பாசமான தம்பி )
வந்ததில் இருந்து உங்கள் கம்பெனி தலைவர் எங்கே ? அவர் ஆபீஸ் எங்கே ? அவர் ஏன் அழைப்பை எடுக்கமாட்டேன்கறார் என்றவாறு இருந்தார் ..
பின் இரவு சாப்பிட சென்றுவிட்டார் ..
நாங்கள் அண்ணே கொஞ்சம் வாங்க ஐயா சீரியஸ் னு (அவர் இறந்து விட்டார் ) அலைபேசியில் அழைத்தால்
இரு தம்பி இன்னும் பரோட்டா வரல.. வந்துரேன் னு பதில் சொல்றார் ..
பின் வந்து (பரோட்டா சாப்பிட்டு தான் வந்தார் ) மரணத்தை பற்றி சிறிதும் அலட்டிகொள்ளாது மீண்டும் அதன் தலைவருக்கு அழைக்க இப்ப சுவிட்ச் ஆப் தான் (நாங்க இன்போர்ம் பண்ணிட்டோம்ல )
அவருக்கு கோவம் வந்துவிட்டது ,என்ன ஆளுயா உங்க தலைவர் இப்படி பண்றாரு இந்த உடலை உங்க சைட் ல கொண்டுபோய் வைத்துவிடுவேன் என்று அவர் முடிவெடுக்க, சிறிது நேரம் கழித்து அவரே அழைத்து பேசினார் (நாங்க அதையும் வேறு ஒரு வழியில் இன்போர்ம் பண்ணிட்டோம்ல )
இப்போது அந்த தம்பிக்கு கோபம் வரவேயில்லை ..
மிக அழகாக பேசினார் , ஐயா அண்ணா இறந்துட்டார் கொஞ்சம் ஏதாவது பாத்து பண்ணா நல்ல இருக்கும் ..
நீண்ட நேர உரையாடலின் பிறகு ஒரு புன்னகையுடன் அலைபேசியை வைப்பது மட்டும் தெரிந்தது ( இதை லாம் கேக்கணுமா சாமினு நான் தள்ளிபோயிட்டேன் )..
செட்டில்மென்ட் முடிவு செய்யப்பட்ட மகிழ்ச்சி
எந்த நாடக கண்ணீரும் அவருக்கு வராதது எனக்கு மகிழ்ச்சி
பொணத்த வச்சும் வியாபாரமா ..!!
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடல் என் மூளையின் செவிப்பறையில் ஓட
நான் அந்த இடத்தை விட்டு ஓடி வந்துவிட்டேன்